புளுட்டோனியம் செலீனைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோசெலீனைடு, புளுட்டோனியம்(II) செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
23299-88-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PtSe | |
வாய்ப்பாட்டு எடை | 323.024 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
உருகுநிலை | 2,075 °C (3,767 °F; 2,348 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புளுட்டோனியம் சல்பைடு புளுட்டோனியம் தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் செலீனைடு இசுட்ரோன்சியம் செலீனைடு பேரியம் செலீனைடு இரும்பு(II) செலீனைடு இரும்பு(III) செலீனைடு காரீய(II) செலீனைடு பிரசியோடைமியம் செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளுட்டோனியம் செலீனைடு (Plutonium selenide) என்பது PuSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] புளுட்டோனியமும் செலீனியமும் சேர்ந்து இந்த இரும சேர்மம் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.
தயாரிப்பு
[தொகு]இருபுளுட்டோனியம் முச்செலீனைடும் புளுட்டோனியம் மூவைதரைடும் 1600 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் புளுட்டோனியம் செலீனைடு உருவாகிறது.
- Pu2Se3 + 2PuH3 -> 4 PuSe + 3 H2
220-1000 பாகை செல்சியம் வெப்பநிலையில் விகிதவியல் அளவுகளில் இரண்டு தூய தனிமங்களும் சேர்ந்தாலும் புளுட்டோனியம் செலீனைடு தோன்றும்.
- Pu + Se -> PuSe
பண்புகள்
[தொகு]புளுட்டோனியம் செலீனைடு ஒரு கனசதுர அமைப்புடன் இடக் குழு Fm3m, மற்றும் a = 0.57934 nm, Z = 4 என்ற அலகு அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் கருப்பு நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[3][4]
அதிகரித்து வரும் அழுத்தத்தினால் இரண்டு கட்ட நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன: 20 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் முக்கோண அமைப்பும், 35 கிகா பாசுக்கலில் கனசதுர அமைப்பும் என சீசியம் குளோரைடு வகை கட்டமைப்பும் தோன்றுகின்றன.
புளுட்டோனியம் செலீனைடு தண்ணீரில் கரையாது.
புளுட்டோனியம் செலீனைடின் காந்த ஏற்புத்திறன் கியூரி-வெய்சு விதியினை பின்பற்றுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eyring, LeRoy; O'Keeffe, Michael (1970). The Chemistry of Extended Defects in Non-metallic Solids: Proceedings of the Institute for Advanced Study on the Chemistry of Extended Defects in Non-Metallic Solids, Casa Blanca Inn, Scottsdale, Arizona, April 16-26, 1969 (in ஆங்கிலம்). North-Holland Publishing Company. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7204-0164-6. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
- ↑ Burke, Robert (17 June 2013). Hazardous Materials Chemistry for Emergency Responders (in ஆங்கிலம்). CRC Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4986-6. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
- ↑ Gensini, M.; Gering, E.; Heathman, S.; Benedict, U.; Spirlet, J. C. (1 April 1990). "High-pressure phases of plutonium monoselenide studied by X-ray diffraction". High Pressure Research 2 (5–6): 347–359. doi:10.1080/08957959008203187. பன்னாட்டுத் தர தொடர் எண்:0895-7959. https://www.tandfonline.com/doi/abs/10.1080/08957959008203187?journalCode=ghpr20. பார்த்த நாள்: 6 August 2021.
- ↑ "WebElements Periodic Table » Plutonium » plutonium selenide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3783. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.