புளுட்டோனியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம் முப்புரோமைடு, புளுட்டோனியம் டிரைபுரோமைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
15752-46-2
20737-00-2 hexahydrate
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943065
பண்புகள்
Br3Pu
வாய்ப்பாட்டு எடை 483.71 g·mol−1
தோற்றம் பச்சை[1]
உருகுநிலை
கொதிநிலை 1,463 °C (2,665 °F; 1,736 K)
நீரில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புளுட்டோனியம்(III) புரோமைடு (Plutonium(III) bromide) என்பது PuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. 767 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளுட்டோனியம்(III) புரோமைடு உருகுகிறது.[1] பச்சை நிறத்துடன் கதிரியக்கப் பண்புகளைக் கொண்டுள்ள புளுட்டோனியம்(III) புரோமைடு படிகவியல் கட்டமைப்பு தொல்பொருள் வகையாகக் பயன்படுத்தப்பட்டாலும் சில பயன்களையும் கொண்டுள்ளது.

Crystal structure of PuBr3
படிகக் கட்டமைப்பு
unit cell of PuBr3
அலகுக் கூடு
PuBr3:      Pt3+      Br

புளுட்டோனியம் முப்புரோமைடின் படிக அமைப்பு முதன்முதலில் வில்லியம் அவுல்டர் சக்காரியாசனால் 1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2] ஒருவகையான சதுர எதிர்ப்பட்டக செஞ்சாய்சதுர படிகங்களாக புளுட்டோனியம் முப்புரோமைடு உருவாகிறது. இதில் புளுட்டோனியம் அணுக்கள் 8 ஒருங்கிணைப்பு ஈருச்சி முக்கோணப் படிகவடிவை ஏற்றுக்கொள்கிறது. oS16 என்ற பியர்சன் குறியீட்டெண்ணும் பன்னாட்டு ஒன்றியத்தின் படிகவியல் வகைப்பாட்டின்படி 63 அல்லது Cmcm (எர்மன்-மாகியுன் வகை) என்ற இடக்குழு எண்ணும் புளுட்டோனியம் முப்புரோமைடை அடையாளப்படுத்துகின்றன.பெரும்பாலான மூவிணைதிற குளோரைடு மற்றும் புரோமைடு உப்புகள் லாந்தனைடு மற்றும் ஆக்டினைடுகளின் உப்புகள் புளுட்டோனியம் முப்புரோமை கட்டமைப்பில் படிகமாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, N. N.. Chemistry of the elements (2nd ). Boston, Mass.. பக். 1270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750633654. 
  2. Zachariasen, W. H. (2 November 1948). "Crystal chemical studies of the 5f-series of elements. I. New structure types". Acta Crystallographica 1 (5): 265–268. doi:10.1107/S0365110X48000703.