புளுட்டோனியம் போரைடு

புளுட்டோனியம் போரைடு (plutonium boride) என்பது புளுட்டோனியமும் போரானும் நேரடியாக வெற்றிடச் சூழலில் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் வினைபுரிந்து உண்டாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
1200 0 செல்சியசு வெப்பநிலையில் 40 முதல் 70 சதவீத போரான் சேர்ந்துள்ள புளுட்டோனியம் போரைடு உருவாவதாகவும்,TiB, ZrB மற்றும் HfB சேர்மங்கள் போல. அதில் Pu-B பிணைப்பு நீளம் 2.46 Å மற்றும் NaCl படிக அமைப்புடனும் காணப்படும் என்றும் கருதப்படுகிறது.[1] புளுட்டோனியம் போரைடின் இருப்பு குறித்து பல்வேறு எதிர்ப்புகள் தோன்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன[2]
800 0 செல்சியசு வெப்பநிலையில் PuB2 உருவாகிறது. மற்ற இருபோரைடுகள் போலவே புளுட்டோனியம் இருபோரைடும் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.
1200 0 செல்சியசு வெப்பநிலையில் 70 முதல் 85 சதவீத அளவு போரானுடன் சேர்ந்தால் PuB4 மற்றும் PuB6 போரைடுகளின் கலவை உண்டாகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது PuB6 அதிகமாக உருவாகிறது. PuB4 சேர்மம் UB4 சேர்மத்தைப்போல நான்முக அமைப்பையும், PuB6 , CaB6, LaB6 சேர்மங்கள் போல கனசதுர அமைப்பையும் கொண்டுள்ளன[1].
PuB100 என்ற போரைடு மிகவும் குறிப்பிடத்தக்க விவாதங்களுக்கு இடமளித்துள்ளது. இதன் இருப்பு போரான் மாசடைதலின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. போரைடுகள் 1 சதவீத மாசு அடைந்திருந்தாலும் அவற்றின் படிக வடிவங்கள் மாறுபடுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 B. J. McDonald; W. I. Stuart (1960). "The crystal structures of some plutonium borides". Acta Cryst. 13 (5): 447–448. doi:10.1107/S0365110X60001059.
- ↑ H. A. Eick (1965). "Plutonium Borides". Inorganic Chemistry 4 (8): 1237–1239. doi:10.1021/ic50030a037.