பெர்டெக்னிடைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்டெக்னிடைல் புளோரைடு
இனங்காட்டிகள்
42246-22-0 Y
InChI
  • InChI=1S/FH.3O.Tc/h1H;;;;/q;;;;+1/p-1
    Key: OYCMXSPACZPBDD-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[Tc](=O)(=O)F
பண்புகள்
TcO
3
F
வாய்ப்பாட்டு எடை 165,00 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற வேதிப்பொருள்
உருகுநிலை 18.3 °C (64.9 °F; 291.4 K)
கொதிநிலை 100 °C (212 °F; 373 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்டெக்னிடைல் புளோரைடு (Pertechnetyl fluoride) என்பது TcO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெக்னீசியம், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1963 ஆம் ஆண்டில் எச். செலிக்கு மற்றும் ஜி. மால்ம் ஆகியோர் பெர்டெக்னிடைல் புளோரைடை தயாரித்தனர்.[1][2]

தயாரிப்பு[தொகு]

150 பாகை செல்சியசு வெப்பநிலையில் டெக்னீசியம்(IV) ஆக்சைடுடன் புளோரின் வாயுவைச் சேர்த்தால் பெர்டெக்னிடைல் புளோரைடு உருவாகும்.:[3]

3TcO2 + 4F2 -> 2TcO3F + TcF6
  • நீரற்ற ஐதரசன் புளோரைடுடன் அம்மோனியம் பெர்டெக்னிகேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பெர்டெக்னிடைல் புளோரைடு உருவாகும். :
NH4TcO4 + 2HF -> TcO3F + NH4F + H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

பெர்டெக்னிடைல் புளோரைடு மஞ்சள் நிறத்தில் உருவாகிறது.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

பெர்டெக்னிடைல் புளோரைடை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தினால் பெர்டெக்னிடிக் அமிலமும் ஐதரோபுளோரிக் அமிலமும் உருவாகின்றன.

TcO3F + H2O -> HTcO4 + HF

ஆர்சனிக் பெண்டாபுளோரைடு அல்லது ஆண்டிமனிபெண்டாபுளோரைடு சேர்மத்துடனும் பெர்டெக்னிடைல் புளோரைடு வினைபுரிகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmidbaur, Hubert; Schwarz, W. H. Eugen (21 April 2021). "Permanganyl Fluoride: A Brief History of the Molecule MnO 3 F and of Those Who Cared For It" (in en). Chemistry – A European Journal 27 (23): 6848–6859. doi:10.1002/chem.202004759. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. பப்மெட்:33219726. 
  2. Baran, Enrique J. (1 January 1975). "Vibrational Properties of Pertechnetyl Fluoride". Spectroscopy Letters 8 (8): 599–603. doi:10.1080/00387017508067365. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-7010. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00387017508067365. பார்த்த நாள்: 22 March 2023. 
  3. Selig, H.; Malm, J. G. (1 April 1963). "The preparation and properties of pertechnetyl fluoride, TcO3F" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 25 (4): 349–351. doi:10.1016/0022-1902(63)80183-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190263801839. பார்த்த நாள்: 22 March 2023. 
  4. Lawroski, Stephen (1963). "Research and development on nonaqueous processing" (in en). Reactor Fuel Processing (U.S. Argonne National Laboratory.) 7 (1): 28. https://books.google.com/books?id=5xzHE8cSNjMC&dq=Pertechnetyl+fluoride&pg=RA11-PA28. பார்த்த நாள்: 22 March 2023. 
  5. Supeł, Joanna; Abram, Ulrich; Hagenbach, Adelheid; Seppelt, Konrad (1 July 2007). "Technetium Fluoride Trioxide, TcO 3 F, Preparation and Properties" (in en). Inorganic Chemistry 46 (14): 5591–5595. doi:10.1021/ic070333y. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:17547395. https://pubs.acs.org/doi/10.1021/ic070333y. பார்த்த நாள்: 22 March 2023.