குரோமியம் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம் ஐம்புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(V) புளோரைடு
வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு, குரோமியம்(V) புளோரைடு, ஐம்புளோரோகுரோமியம், பென்டாபுளோரிடோகுரோமியம்
இனங்காட்டிகள்
14884-42-5
ChemSpider 4574207
InChI
 • InChI=1S/Cr.5FH/h;5*1H/q+5;;;;;/p-5
  Key: OMKYWARVLGERCK-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460742
SMILES
 • F[Cr](F)(F)(F)F
பண்புகள்
CrF5
வாய்ப்பாட்டு எடை 291.71 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்[1]
அடர்த்தி 2.89 கி/செ.மீ3[1]
உருகுநிலை 34 °C (93 °F; 307 K)
கொதிநிலை 117 °C (243 °F; 390 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குரோமியம் ஐம்புளோரைடு (Chromium pentafluoride) என்பது CrF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்[2]. சிவப்பு நிறத் திண்மமான இச்சேர்மம் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் 30 ° செ வெப்பநிலையில் உருகும் தன்மையும் கொண்டிருக்கிறது. எளிதாக நீராற்பகுப்பு அடைந்து குரோமியம்(III) மற்றும் குரோமியம்(VI) அயனிகளைத் தருகிறது[3] . வனேடியம் ஐம்புளோரைடின் படிக அமைப்பையே குரோமியம் ஐம்புளோரைடும் கொண்டிருக்கிறது[4]. பரவலாகக் கிடைக்கக்கூடிய குரோமியம் புளோரைடு, குரோமியம் ஐம்புளோரைடு ஆகும். கருத்தியாலான குரோமியம் அறுபுளோரைடு இதுவரை தயாரிக்கப்படவில்லை. [5]

பொட்டாசியம் மற்றும் குரோமிக் குளோரைடுகள் மீது புளோரின் வாயுவைச் செலுத்தும் போது விளைபொருளாக குரோமியம் ஐம்புளோரைடு உண்டாகிறது.[6]

அமைப்பைப் பொறுத்தவரை இச்சேர்மம் ஒருபரிமான ஒருங்கிணைப்பு பலபடியாக இருக்கிறது. ஒவ்வொரு Cr(V) மையங்களும் எண்முக மூலக்கூற்று வடிவியலைப் பெற்றுள்ளன.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-43981462-8. http://books.google.com/books?id=SFD30BvPBhoC. பார்த்த நாள்: 2014-01-10. 
 2. Jacques Guertin, James A. Jacobs, Cynthia P. Avakian, தொகுப்பாசிரியர் (2004). Chromium(VI) Handbook. CRC Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780203487969. 
 3. Amit Aora (2005). Text Book Of Inorganic Chemistry. Discovery Publishing House. பக். 649. 
 4. A. G. Sharpe (1983). Advances in Inorganic Chemistry. 27. Academic Press. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080578767. 
 5. Riedel, Sebastian; Kaupp, Martin (2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. http://144.206.159.178/ft/243/588116/14862785.pdf. 
 6. A. G. Sharpe (December 2012). J.H. Simons. ed. Fluorine Chemistry. 2. Elsevier. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323145435. 
 7. "The structures of CrF5 and CrF5*SbF5" Shorafa, H.; Seppelt, K. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 2009, vol. 635, p112-p114.

இவற்றையும் காண்க[தொகு]