குரோமியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1308-14-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14787 |
வே.ந.வி.ப எண் | GB2670000 |
| |
பண்புகள் | |
Cr(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 103.02 கி/மோல் |
தோற்றம் | பச்சை, ஊன்பசை வீழ்படிவு |
அடர்த்தி | 3.11 கி/செ.மீ3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(III) ஐதராக்சைடு (Chromium(III) hydroxide) என்பது Cr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இச்சேர்மம் நிறப்பூச்சாக, சாயமூன்றியாக மற்றும் வினையூக்கியாகக் கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]
குரோமியம்(III) ஐதராக்சைடு வரையறுக்கப்படாத கட்டமைப்பும் குறைந்த கரைதிறனும் கொண்ட பலபடியாகும். ஈரியல்பு கரைப்பானிலும் வலுவான காரங்கள் மற்றும் வலுவான அமிலங்கள் இரண்டிலும் கரைகிறது.[2]
- காரத்தில்:
- அமிலத்தில்:
குரோமியம் உப்புக் கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் குரோமியம்(III) ஐதராக்சைடு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.
தூய Cr(OH)3 2020 ஆம் ஆண்டு வரை கனிம இனங்களில் இருப்பதாக அறியப்படவில்லை. இருப்பினும், ஆக்சி ஐதராக்சைடின் மூன்று இயற்கையான பலலுருவங்கள் அறியப்படுகின்றன: பிரேசுவெல்லைட், கிரிமால்டைட்டு மற்றும் கயனைட்டு என்பன இவ்வுருவங்களாகும். [3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). "Chromium". Lehrbuch der Anorganischen Chemie (in German) (91–100 ed.). Walter de Gruyter. pp. 1081–1095. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-007511-3.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Rai, Dhanpat; Sass, Bruce M.; Moore, Dean A. "Chromium(III) hydrolysis constants and solubility of chromium(III) hydroxide" Inorganic Chemistry 1987, volume 26, pp. 345-9. எஆசு:10.1021/ic00250a002
- ↑ "Bracewellite".
- ↑ "Grimaldiite".
- ↑ "Guyanaite".
- ↑ "List of Minerals". 21 March 2011.