உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்(III) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) அயோடைடு
வேறு பெயர்கள்
குரோமியம் மூவயோடைடு, குரோமிக் அயோடைடு
இனங்காட்டிகள்
13569-75-0
ChemSpider 75416
InChI
  • InChI=1S/Cr.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: PPUZYFWVBLIDMP-UHFFFAOYSA-K
  • InChI=1/Cr.3HI/h;3*1H/q+3;;;/p-3/rCrI3/c2-1(3)4
    Key: PPUZYFWVBLIDMP-GXOYXQMQAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83586
  • [Cr](I)(I)I
பண்புகள்
CrI3
வாய்ப்பாட்டு எடை 432.710 கி/மோல்
தோற்றம் கருப்பு திண்மம்
அடர்த்தி 5.32 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) அயோடைடு (Chromium(III) iodide) என்பது CrI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது குரோமியம் மூவயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் மற்ற குரோமியம் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது[2].

குரோமியம்(III) குளோரைடுடன் சமவடிவ மூலக அமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் இரட்டையடுக்கு அணிக்கோவையுடன் கனசதுர வடிவ பொதிவமைப்பு அலகு அறை கொண்டதொரு படிகமாகும். இவ்வமைப்பில் குரோமியம் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்தை வெளிப்படுத்துகிறது[3] .

தயாரிப்பு மற்றும் பண்புகள்

[தொகு]

குரோமியம் உலோகத்துடன் அதிகப்படியான அயோடினை 500 0 செல்சியசு வெப்பநிலையில் நேரடியாக வினைப்படுத்தி குரோமியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

2 Cr + 3 I2 → 2 CrI3

மீத்தூய மாதிரி குரோமியம்(III) அயோடைடு தயாரிக்க வேண்டுமெனில் மேற்கண்ட முறையில் தயாரிக்கப்பட்ட குரோமியம்(III) அயோடைடு 700 T0 செல்சியசு வெப்பநிலை அளவுக்கு சூடுபடுத்தி முதலில் குரோமியம்(II) அயோடைடாகச் சிதைவடையச் செய்யப்படுகிறது. பின்னர் இது மீண்டும் அயோடினேற்றம் செய்யப்பட்டு குரோமியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது[2].

குரோமியம்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் உள்ள காற்று அல்லது ஆக்சிசனுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால், 200 0 செல்சியசு வெப்பநிலையில் இது ஆக்சிசனுடன் வினைபுரிந்து அயோடினை வெளியேற்றுகிறது. CrCl3 போலவே குரோமியம்(III) அயோடைடும் தண்ணீரில் குறைந்த அளவிலேயே கரைகிறது என்பதால் இயக்கவியலில் மந்தத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறிதளவு குரோமசயோடைடு சேர்ப்பதால் கரைசல் செயல்முறையில் வேகம் சற்று அதிகரிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 123. ISBN 978-1-43981462-8. Retrieved 2014-01-10.
  2. 2.0 2.1 Gregory, N. W., Handy, L. L. "Chromium(III) iodide" Inorg. Synth. 1957, vol. 5, 128-130. எஆசு:10.1002/9780470132364.ch34
  3. Gregory, N. W.; Handy, L. L. (1952). "Structural Properties of Chromium(III) Iodide and Some Chromium(III) Mixed Halides". J. Am. Chem. Soc 74: 891–893. doi:10.1021/ja01124a009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(III)_அயோடைடு&oldid=3950674" இலிருந்து மீள்விக்கப்பட்டது