குரோமியம் நைட்ரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம் நைட்ரைடு
| |
வேறு பெயர்கள்
குரோமியம்(III) நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
24094-93-7 | |
ChemSpider | 81581 |
EC number | 246-016-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 90362 |
| |
பண்புகள் | |
CrN | |
வாய்ப்பாட்டு எடை | 66.003 கி/மோல் |
தோற்றம் | கருப்புநிறத் தூள் |
அடர்த்தி | 5.9 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 1770 ˚செ (சிதையும்.)[2] |
கரையாது[3] | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−117.15 கியூ/மோல் [4] |
நியம மோலார் எந்திரோப்பி S |
37.75 J K−1 mol−1 [4] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.லி/மீ3[5] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3[5] |
உடனடி அபாயம்
|
250 மி.கி/மீ3[5] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம் நைட்ரைடு (Chromium nitride) என்பது CrN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிமவேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மிகவும் கடினமான இச்சேர்மம் அரித்தலுக்கு எதிரான உயர் தடையை வழங்குகிறது. இச்சேர்மமானது குரோமியம் அணிக்கோவையின் எண்முகங்களுக்கு இடையிலுள்ள துளைகளில் நைட்ரசன் அணுக்கள் ஆக்ரமித்துள்ள இடுக்குசார் சேர்ம வகையாகக் கருதப்படுகிறது [2]. இதனடிப்படையில் நைட்ரைடு (N3−) அயனிகளைக் கொண்டிருந்தாலும் இது கண்டிப்பாக ஒரு குரோமியம் (III) சேர்மமல்ல. குரோமியம் இரண்டாவதாக ஒரு இடுக்குசார் நைட்ரைடான டைகுரோமியம் நைட்ரைடையும் Cr2N. உருவாக்குகிறது.
தயாரிப்பு
[தொகு]800 பாகை செல்சியசு வெப்பநிலையில் குரோமியமும் நைட்ரசனும் நேரடியாக வினைபுரிந்து குரோமியம்(III) நைட்ரைடு உருவாகிறது.
- 2 Cr + N2 → 2 CrN
நேர்மின்முனை வில் படிவு போன்ற இயற்பிய ஆவி படிதல் முறைகளிலும் இதைத் தயாரிக்க முடியும்.
பயன்கள்
[தொகு]அரிப்பைத் தடுப்பதற்கான மேற்பூச்சுப் பொருளாக குரோமியம்(III) நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலோக உருவாக்கம் மற்றும் நெகிழி வார்ப்புகள் உருவாக்கம் போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [6]. பெரும்பாலும் மருத்துவத் துறையில் பயன்படும் மருத்துவக் கருவிகள், உட்பொருத்திகள் போன்றவற்றைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. CrAlN போன்ற தனிச்சிறப்பு மிக்க கலப்புலோக மேர்பூச்சுகள் தயாரித்தலிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கத்தரிக்கும் கருவிகளின் மேற்பூச்சாக இப்பூச்சை பயன்படுத்துகிறார்கள் [7].
காந்தப்பண்பு
[தொகு]CrN இன் அடிப்படைப் பொருளியல் இயற்பியல் பண்புகள் பொருளியலின் சாதகமான பண்புகளை உயர்த்துவதாக உள்ளன. இயற்கை பொருட்கள் போன்ற உயர்ந்த அறிவியல் பத்திரிகைகளில் இது குறித்து சமீபத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, குறைந்த வெப்பநிலையிலும், உயர் வெப்பநிலையிலும் காந்தத்தன்மையின் முக்கியத்துவமானது, இச்சேர்மத்தின் மின்னணு கட்டமைப்பின் குவாண்டம் இயக்கவியல் கணக்கீடுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது [8][9] In particular, the importance of magnetism in both the low temperature and the high temperature phases has been demonstrated by means of quantum mechanical calculations of the electronic structure of the compound.[10][11][12].
இயற்கைத் தோற்றம்
[தொகு]சிலவகை விண்வீழ் கற்களில் குரோமியம் நைட்ரைடு இயற்கையாக கேரிசுபெர்கைட் என்ற கனிம வடிவில் அரிதாகக் காணப்படுகிறது [13].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chromium(III) nitride at webelements.com
- ↑ 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ http://www.alfa-chemcat.com/daten_msds/D/12149_-_D.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 NIST Chemistry Webbook
- ↑ 5.0 5.1 5.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0141". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ J. Vetter, Surf. Coat. Technol. 76, 719 (2005)
- ↑ A. E. Reiter, V. H. Derflinger, B. Hanselmann, T. Bachmann, and B. Sartory, Surf. Coat. Technol. 200, 2114 (2005).
- ↑ F. Rivadulla et al., Nature Mater. 8, 947 (2009)
- ↑ B. Alling, T. Marten, and I. A. Abrikosov, Nature Materials 9, 283, (2010)
- ↑ A. Filippetti and N. A. Hill, Phys. Rev. Lett. 85, 5166 (2000).
- ↑ A. Herwadkar and W. R. L. Lambrecht, Phys. Rev. B 79, 035125 (2009)
- ↑ B. Alling, T. Marten, and I. A. Abrikosov, Physical Review B, 82, 184430 (2010)
- ↑ Mindat, http://www.mindat.org/min-904.html