குரோமியம்(II) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்(II) சல்பைடு
இனங்காட்டிகள்
12018-06-3
ChemSpider 10129648
InChI
  • InChI=1S/Cr.S/q+2;-2
    Key: LXEAUGDQDABWTN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11955372
SMILES
  • [S-2].[Cr+2]
பண்புகள்
CrS
வாய்ப்பாட்டு எடை 84.061 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
உருகுநிலை 1,550 °C (2,820 °F; 1,820 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குரோமியம்(II) சல்பைடு (Chromium(II) sulfide) என்பது CrS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] குரோமியமும் கந்தகமும் சேர்ந்து கருப்பு நிறத்தில் அறுகோணப் படிகங்களாக குரோமியம்(II) சல்பைடு உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.[4]

தயாரிப்பு[தொகு]

உயர் வெப்பநிலையில் கந்தகம் அல்லது ஐதரசன் சல்பைடுடன் குரோமியம் உலோகம் வினை புரிவதால் குரோமியம்(II) சல்பைடு உருவாகும். குரோமியம்(III) குளோரைடை ஐதரசன் சல்பைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலமும், ஐதரசனுடன் குரோமியம்(III) சல்பைடை சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமும் அல்லது குரோமியம்(II) குளோரைடுடன் இலித்தியம் சல்பைடை சேர்த்து ஈரிடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்துவதன் மூலமும் குரோமியம்(II) சல்பைடை உருவாக்க முடியும்.[5]

Cr + S -> CrS
Cr + H2S -> CrS + H2 >
2CrCl3 + 3H2S -> 2CrS + S + 6HCl
Cr2S3 + H2 -> 2CrS + H2S
Li2S + CrCl2 -> 2LiCl + CrS

இயற்பியல் பண்புகள்[தொகு]

குரோமியம்(II) சல்பைடு இரண்டு படிக மாற்றங்களுடன் கருப்பு நிறமான பாரா காந்தப் பண்புடைய படிகங்களை உருவாக்குகிறது::[6]

α-CrS, மேற்கட்டமைப்பு கட்ட நிலை, அறுகோணப் படிக அமைப்பு, அலகு அளவுருக்கள் a = 1.200 நானோமீட்டர், c = 1.152 நானோமீட்டர்.

β-CrS, ஒற்றைச்சரிவச்சு அமைப்பு, அலகு அளவுருக்கள் a = 0.594 நானோமீட்டர், b = 0.341 நானோமீட்டர், c = 0.563 நானோமீட்டர், β = 91.73°.

குரோமியம்(II) சல்பைடு ஒரு குறைக்கடத்தியாகும்.[7][8] வினையூக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bretherick, L. (27 October 2016) (in en). Bretherick's Handbook of Reactive Chemical Hazards. Elsevier. பக். 1074. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-6250-8. https://books.google.com/books?id=4_PJCgAAQBAJ&dq=Chromium+(II)+sulfide+CrS&pg=PA1074. பார்த்த நாள்: 1 November 2021. 
  2. Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001) (in en). Inorganic Chemistry. Academic Press. பக். 1372. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-352651-9. https://books.google.com/books?id=Mtth5g59dEIC&dq=Chromium+(II)+sulfide+CrS&pg=PA1377. பார்த்த நாள்: 1 November 2021. 
  3. Sr, Richard J. Lewis (13 June 2008) (in en). Hazardous Chemicals Desk Reference. John Wiley & Sons. பக். 670. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-18024-2. https://books.google.com/books?id=WZeBDwAAQBAJ&dq=Chromium+(II)+sulfide&pg=PA670. பார்த்த நாள்: 1 November 2021. 
  4. Lide, David R. (26 June 2006) (in en). 1998 Freshman Achievement Award. CRC Press. பக். 6-111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0594-8. https://books.google.com/books?id=lFjg0L-uOxoC&dq=Chromium+(II)+sulfide&pg=SA6-PA111. பார்த்த நாள்: 1 November 2021. 
  5. Wadhawan, Amar R.; Livi, Kenneth J.; Stone, Alan T.; Bouwer, Edward J. (2015-03-17). "Influence of oxygenation on chromium redox reactions with manganese sulfide (MnS(s))". Environmental Science & Technology 49 (6): 3523–3531. doi:10.1021/es5057165. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-5851. பப்மெட்:25688449. 
  6. PubChem (2002). "Chromium sulfide (CrS)" (in en). PubChem (National Library of Medicine) 40 (1): 24–26. பப்மெட்:11955372. https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/11955372. பார்த்த நாள்: 2022-09-04. 
  7. Riedel, Erwin; Janiak, Christoph (2011) (in German). Anorganische Chemie. Walter de Gruyter. பக். 732. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-022566-2. 
  8. Holleman, A. F.; Wiberg, E.; Wiberg, N. (1995) (in German). Lehrbuch der Anorganischen Chemie. 101. Auflage.. Walter de Gruyter. பக். 1451. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-012641-9. https://archive.org/details/lehrbuchderanorg0000arno. 
  9. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3082. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Chromium+(II)+sulfide+CrS&pg=PA3082. பார்த்த நாள்: 1 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(II)_சல்பைடு&oldid=3937263" இலிருந்து மீள்விக்கப்பட்டது