குரோமியம்(II) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(2+) சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
குரோமசு சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15928-77-5 (ஐந்து நீரேற்று) 19512-13-1 (முந்நீரேற்று) 13825-86-0 (நீரிலி) | |
ChemSpider | 55589 |
பப்கெம் | 61686 |
UNII | Y0C99N5TMZ |
பண்புகள் | |
CrSO4•5 H2O | |
வாய்ப்பாட்டு எடை | 238.13 (ஐந்து நீரேற்று) |
தோற்றம் | நீல நிறத் திண்மம் (ஐந்து நீரேற்று ) |
21 கி/100 மி.லி (0°செ, ஐந்து நீரேற்று) | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(II) சல்பேட்டு (Chromium(II) sulphate) என்பது CrSO4•n H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிமவேதியியல் சேர்மமாகும். இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பல நீரேற்று உப்புகளை காணமுடிகிறது. பெண்டா ஐதரேட்டு அல்லது ஐந்துநீரேற்று உப்பானது நீலநிறத்துடன் எளிதில் நீரில் கரையக்கூடியதாக உள்ளது. குரோமியம்(II) கரைசல்கள் காற்றினால் எளிமையாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு குரோமியம்(III) இனங்களைக் கொடுக்கின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் குரோமியம்(II) கரைசல்கள் சிறப்பு ஒடுக்கும் முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன [1].
குரோமியம் உலோகத்தை நீரிய கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் குரோமியம்(II) சல்பேட்டு உப்பு கிடைக்கிறது :[2]
- Cr + H2SO4 + 5 H2O → CrSO4•5 H2O + H2.
சல்பேட்டு உப்புகளை குரோமியம்(II) அசிட்டேட்டுகளுடன் வினைபுரியச் செய்வதனாலும் அல்லது தளத்திலேயே பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்வுகளில் குரோமியம்(III) சல்பேட்டை துத்தநாகத்துடன் சேர்த்து குறைத்தல் வினை நிகழச் செய்தும் கூட குரோமியம்(II) சல்பேட்டு உப்பு தயாரிக்கலாம்.
கட்டமைப்பு
[தொகு]நீரிய கரைசல்களில் குரோமியம்(II) சல்பேட்டு நீர் உலோக அணைவுச் சேர்மங்களாக உருவாகிறது. ஆறு நீர் ஈந்தணைவிகள் மட்டுமே உலோக அணுவைச் சூழ்ந்துள்ளன. படிக உப்புகளின் கட்டமைப்புகள் தொடர்புடைய நீரேற்றுகளான தாமிரம்(II) சல்பேட்டின் கட்டமைப்பை ஒத்துள்ளன. குரோமசு சல்பேட்டின் ஐந்து நீரேற்று, முந்நீரேற்று, ஒற்றை நீரேற்றுகள் மற்றும் நீரிலி வழிப்பொருட்கள் அறியப்படுகின்றன. இச்சேர்மங்கள் எல்லாவற்றிலும் Cr(II) மையம் எண்முக ஒருங்கிணைவு வடிவத்தை ஏற்று நீர் மற்றும் சல்பேட்டு ஈந்தனைவிகளால் ஆறு ஆக்சிசன் மையங்களை ஒருங்கிணைக்கிறது [3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. Zurqiyah and C. E. Castro "Reduction of Conjugated Alkenes With Chromium(II) Sulfate: Diethyl Succinate" Organic Syntheses, Vol. 49, p.98 (1969).எஆசு:10.15227/orgsyn.049.0098
- ↑ Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1365.
- ↑ Hitchman, Michael A.; Lichon, Michael; McDonald, Robbie G.; Smith, Peter W.; Stranger, Robert "Crystal and molecular structure of chromium(II) sulfate pentahydrate and single-crystal electronic spectra and bonding of CrSO4•5 H2O, copper sulfate pentahydrate and CuSO4•5 D2O" Journal of the Chemical Society, Dalton Transactions 1987, pp. 1817-22. எஆசு:10.1039/DT9870001817
- ↑ Dahmen, T.; Glaum, R.; Schmidt, G.; Gruehn, R. "Preparation and crystal structure of chromium(2+) sulfate trihydrate" Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 1990, volume 586, pp. 141-8. எஆசு:10.1002/zaac.19905860119
.