ஆக்டினியம் புளோரைடு
படிகக் கட்டமைப்பு
| |
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஆக்டினியம்(III) புளோரைடு
ஆக்டினியம் டிரைபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 33689-80-4 | |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 101943120 |
| |
| பண்புகள் | |
| AcF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 284 கி/மோல்[1] |
| தோற்றம் | வெண்மை, படிகத் திண்மம் |
| அடர்த்தி | 7.88 கி/செ.மீ3[1] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், hR24 |
| புறவெளித் தொகுதி | P3c1, No. 165[2] |
| Lattice constant | a = 0.741 நா.மீ, c = 0.755 நா.மீ |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஆக்டினியம் புளோரைடு (Actinium fluoride) என்பது AcF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]கரைசல் அல்லது திண்மநிலை வினையின் வழியாக ஆக்டினியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. முதல் வழிமுறையில் ஆக்டினியம் ஐதராக்சைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதனால் விளைபொருள் வீழ்படிவாக்கப்படுகிறது :[3]
Ac(OH)3 + 3HF → AcF3↓ + 3H2O
திண்மநிலை வினையில் ஆக்டினியம் உலோகம் ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து பிளாட்டினப் புடக்குவளையில் வைத்து 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்டினியம் புளோரைடு உருவாகிறது [4][5].
பண்புகள்
[தொகு]ஆக்டினியம் புளோரைடு வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 900-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியாவுடன் வினைபுரிந்து ஆக்டினியம் ஆக்சி புளோரைடைத் தருகிறது.
- AcF3 + 2NH3 + H2O -> AcOF + 2NH4F
இலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது. ஆனால் மேற்கண்ட முறையில் சூடாக்கினால் ஆக்டினியம் புளோரைடு உருகிவிடுகிறது. ஆக்டினியம் ஆக்சி புளோரைடு உருவாவதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.44. ISBN 1439855110.
- ↑ Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.
- ↑ Haire, Richard G. (2006). "Actinium". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. p. 36. ISBN 1-4020-3555-1.
- ↑ Fried, Sherman; Hagemann, French; Zachariasen, W. H. (1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds". Journal of the American Chemical Society 72 (2): 771. doi:10.1021/ja01158a034.
- ↑ Meyer, Gerd and Morss, Lester R. (1991) Synthesis of lanthanide and actinide compounds. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-1018-7. pp. 87–88