ஆக்சிசன் இருபுளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிசன் இருபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
7783-41-7 | |
ChEBI | CHEBI:30494 |
ChemSpider | 22953 |
EC number | 231-996-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24547 |
வே.ந.வி.ப எண் | RS2100000 |
| |
UNII | 7BCS2CW398 |
பண்புகள் | |
OF2 | |
வாய்ப்பாட்டு எடை | 53.9962 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற வாயு, ஒடுக்கப்படும் போது வெளிர் மஞ்சள் திரவம் |
மணம் | விசித்திரமான, விரும்பத்தகாத மணம் |
அடர்த்தி |
|
உருகுநிலை | −223.8 °C (−370.8 °F; 49.3 K) |
கொதிநிலை | −144.75 °C (−228.55 °F; 128.40 K) |
நீராற்பகுப்புக்கு உள்ளாகும்[1] | |
ஆவியமுக்கம் | 48.9 வளிமண்டல அழுத்தம் (at −58.0 °C or −72.4 °F or 215.2 K[a]) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−24.5 கிலோயூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
246.98 யூல்/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 43.3 யூல்/மோல் கெல்வின் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்சிசன் இருபுளோரைடு (Oxygen difluoride) என்பது OF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளோரினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அறியப்பட்டுள்ள ஆக்சிசன் புளோரைடுகளில் ஒன்றாகும். ஆக்சிசன் டைபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இணைதிறன் கூடு எலக்ட்ரான் சோடிகளின் தள்ளுகை கொள்கை கணித்துள்ளபடி ஆக்சிசன் இருபுளோரைடு வளைந்த மூலக்கூற்று வடிவியலை ஏற்றுக்கொள்கிறது. இது ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகவும் இதே காரணத்திற்காக இராக்கெட்டு எரிபொருள் பயன்பாட்டிலும் இது அறிவியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.[2] −144.75 ° செல்சியசு வெப்பநிலை என்ற கொதிநிலையை கொண்டுள்ளது. OF2 என்பது எளிதில் ஆவியாகும் சேர்மமாகும். இதை எளிதில் தனிமைப்படுத்தி பிரித்தெடுக்கலாம். மூவணு சேர்மமாகவும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ஆக்சிசன் இருபுளோரைடு முதன்முதலில் 1929 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டது. உருகிய பொட்டாசியம் புளோரைடுடன் ஐதரோபுளோரிக் அமிலமும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் ஆக்சிசன் இருபுளோரைடு உருவாகும்.[3][4]
நவீன தயாரிப்பு சோடியம் ஐதராக்சைடின் நீர்த்த கரைசலுடன் புளோரினைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுது நவீன தயாரிப்பு முறையாகும். வினையில் சோடியம் புளோரைடு ஓர் உடன் விளைபொருளாக உருவாகிறது:
- 2 F2 + 2 NaOH -> OF2 + 2 NaF + H2O
கட்டமைப்பு
[தொகு]ஆக்சிசன் இருபுளோரைடு வளைந்த மூலக்கூறு வடிவியலை ஏற்றுக்கொள்கிறது. F-O-F சகப் பிணைப்பின் பிணைப்புக் கோணம் 103 பாகைகளாகும். ஆக்சிசன் அணுவின் இயல்பான −2 என்ற ஆக்சிசனேற்ற எண்ணுக்குப் பதிலாக +2 என்ற ஆக்சிசனேற்ற எண்ணால் ஒரு சக்திவாய்ந்த ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது.
வேதியியல் பண்புகள்
[தொகு]200 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் ஆக்சிசன் இருபுளோரைடு ஆக்சிசன் மற்றும் புளோரினாகச் சிதைகிறது.
- 2 OF2 -> O2 + 2 F2
OF2 பல உலோகங்களுடன் வினைபுரிந்து ஆக்சைடுகள் மற்றும் புளோரைடுகளை உருவாக்குகிறது. அலோகங்களும் இதனுடன் வினைபுரிகின்றன: பாசுபரசு OF2 உடன் வினைபுரிந்து PF5 மற்றும் POF3 போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது; கந்தகத்துடன் வினைபுரிந்து SO2 மற்றும் SF4 போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது; மற்றும் மந்தவாயுக்களைப் பொறுத்தவரை வழக்கத்திற்கு மாறாக, செனான் வாயுவுடன் வினைபுரிகிறது. உயர்ந்த வெப்பநிலையில் இச்சேர்மம் XeF4 மற்றும் செனான் ஆக்சிபுளோரைடுகளை அளிக்கிறது.
ஆக்சிசன் இருபுளோரைடு தண்ணீருடன் மிக மெதுவாக வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது:
- OF2 + H2O → 2 HF + O2
கந்தக டை ஆக்சைடை கந்தக மூவாக்சைடாகவும் தனிம புளோரினாகவும் ஆக்சிசனேற்றம் செய்கிறது:
- OF2 + SO2 → SO3 + F2
இருப்பினும், புற ஊதா கதிர்வீச்சின் முன்னிலையில், வினையில் ஈடுபட்டால் கந்தக புளோரைடு (SO2F2) மற்றும் பைரோசல்பூரைல் புளோரைடு (S2O5F2) ஆகியவை உருவாகின்றன:
- OF2 + 2 SO2 → S2O5F2
பாதுகாப்பு
[தொகு]ஆக்சிசன் இருபுளோரைடு தன் ஆக்சிசனேற்றப் பண்புகள் காரணமாக ஒரு பாதுகாப்பற்ற வாயுவாக கருதப்படுகிறது. நீருடன் OF2 சேர்க்கப்பட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் உருவாகும் ஐதரோபுளோரிக் அமிலம் மிகவும் அரிக்கும் தன்மை கொண்டதாகும். மேலும் இது நச்சுத்தன்மையுடையதாகவும் அறியப்படுகிறது. இழையநசிவு நோயை உண்டாக்கும் திறன் கொண்டுள்ளது. இதனால் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறுகிறது மற்றும் இருதய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
பண்பாட்டில்
[தொகு]ராபர்ட் எல். பார்வர்டின் அறிவியல் புனைகதை நாவலான கேம்லாட் 30கே நாவலில் சூரிய மண்டலத்தின் கைப்பர் பட்டையில் வாழும் கற்பனையான வாழ்க்கை வடிவங்களால், ஆக்சிசன் இருபுளோரைடு ஓர் உயிர்வேதியியல் கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. OF2 30 கெல்வின் வெப்பநிலையில் இது ஒரு திடப்பொருளாக இருக்கும் போது, கற்பனையான வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கை வடிவங்கள் ஆற்றல் ஏற்பிகளாகச் செயல்பட்டன. கதிரியக்க வெப்பமூட்டல் மூலம் உயர்ந்த உடல் வெப்பநிலையும் திரவ OF2 இரத்தத்தை பராமரித்தலையும் இவை மேற்கொண்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "difluorine monoxide; oxygen difluoride, physical properties, suppliers, CAS, MSDS, structure, Molecular Formula, Molecular Weight, Solubility, boiling point, melting point". www.chemyq.com. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
- ↑ "Oxygen Difluoride - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
- ↑ Paul Lebeau; Damiens, A. (1929). "Sur un nouveau mode de préparation du fluorure d'oxygène" (in fr). Comptes rendus hebdomadaires des séances de l'Académie des Sciences 188: 1253–1255. http://visualiseur.bnf.fr/CadresFenetre?O=NUMM-3141&I=1253&M=chemindefer. பார்த்த நாள்: February 21, 2013.
- ↑ Paul Lebeau; Damiens, A. (1927). "Sur l'existence d'un composé oxygéné du fluor" (in fr). Comptes rendus hebdomadaires des séances de l'Académie des Sciences 185: 652–654. http://visualiseur.bnf.fr/CadresFenetre?O=NUMM-3138&I=652&M=tdm. பார்த்த நாள்: February 21, 2013.
குறிப்புகள்
[தொகு]- ↑ This is its critical temperature, which is below ordinary அறை வெப்பநிலை.