ஆக்டினியம்(III) ஐதராக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆக்டினியம் ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12249-30-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Ac(OH)3 | |
தோற்றம் | வெண் திண்மம் |
தண்ணீரில் 0.021 (20 °செல்சியசு) | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆக்டினியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு இட்ரியம்(III) ஐதராக்சைடு இலந்தனம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்டினியம்(III) ஐதராக்சைடு (Actinium(III) hydroxide) என்பது Ac(OH)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் கதிரியக்கப் பண்புகளை ஆக்டினியம்(III) ஐதராக்சைடு வெளிப்படுத்துகிறது.
தயாரிப்பு
[தொகு]கரையக்கூடிய ஆக்டினியம் உப்புகளுடன் காரங்கள் அல்லது அம்மோனியா நீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டினியம்(III) ஐதராக்சைடு உருவாகும். வினையின் விளைவாகக் கிடைக்கும் கூழ்மத்திலிருந்து வீழ்படிவாக ஆக்டினியம்(III) ஐதராக்சைடு பிரித்தெடுக்கப்படுகிறது.:[1]
- Ac3+ + 3 OH− → Ac(OH)3↓
இதன் கரைதிறன் இலந்தனம் ஐதராக்டை விட சற்று அதிகமாக உள்ளது., ஆனால் தண்ணீரில் கரையாது.
வேதிப் பண்புகள்
[தொகு]ஆக்டினியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து இது ஆக்டினியம் உப்புகளைக் கொடுக்கிறது.:[1]
- Ac(OH)3 + 3 HNO3 → Ac(NO3)3 + 3 H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Tang, Renhuan; Liu, Yuanfang; Zhang, Qinglian; Zhang, Zhiyao. Series of Inorganic Chemistry. Volume 10. Actinides, Transactinides. 4.4 Actinium compounds. pp 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030572-5 (in Chinese)