ஆக்டினியம்(III) பாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆக்டினியம் மோனோபாசுபேட்டு, ஆக்டினியம் ஒற்றைபாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AcPO4 | |
வாய்ப்பாட்டு எடை | 321.9714 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 5.48 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம்[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்டினியம்(III) பாசுபேட்டு (Actinium(III) phosphate) என்பது AcPO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் பாசுபேட்டு உப்பான இச்சேர்மம் கதிரியக்கப் பண்புடன் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ஆக்டினியம்(III) குளோரைடுடன் மோனோசோடியம் பாசுபேட்டு எனப்படும் ஒற்றைசோடியம் பாசுபேட்டை வினைபுரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தயாரிப்பின்போது முதலில் ஓர் AcPO4•1/2H2O என்ற ஓர் அரை நீரேற்று தோன்றுகிறது. எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. இக்கலவை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்பட்டால் நீரற்ற ஆக்டினியம்(III) பாசுபேட்டு உருவாகிறது. மாசுக்கள் காரணமாக இது கருப்பு நிறத்தில் திண்மமாக கிடைக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Zachariasen, W. H. (1948). "Crystal chemical studies of the 5f-series of elements. I. New structure types". ActaCrystallographica 1 (5): 265–268. doi:10.1107/S0365110X48000703.