உள்ளடக்கத்துக்குச் செல்

திண்மப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்மப் பொருள் (Rigid body) என்பது புறவிசைகள் செயல்படும்போது பொருள் ஒன்று, தனது வடிவத்தில் அல்லது பருமனில் மாற்றமடையாமல் இருக்கும் பொருள் ஆகும். விசையின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் அந்த விசை செயல்படும் பொருளின் வடிவத்திலோ அதாவது அப்பொருளிலுள்ள இரு துகள்களின் இடையே உள்ள தொலைவு மாறாமல் இருக்கும். நடைமுறையில் எந்தப் பொருள்களும் முழுமையான திண்மப் பொருட்கள் அல்ல. புறவிசைகள் செயல்படும்போது, எல்லாப் பொருள்களும் மிகச் சிறிய அளவாவது உருவமாற்றம் அடையும். அம்மாற்றமானது புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சிறியதாக இருக்கும் பொருட்கள் திண்மப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்மப்_பொருள்&oldid=2056637" இலிருந்து மீள்விக்கப்பட்டது