தோரியம் டெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோரியம்(IV) புளோரைடு
Thorium(IV) fluoride Thorium tetrafluoride
இனங்காட்டிகள்
13709-59-6
EC number 237-259-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83680
பண்புகள்
ThF4
வாய்ப்பாட்டு எடை 308.03 கி/மோல்
தோற்றம் நீர் உறிஞ்சும் திறன் கொண்ட வெண்ணிறப் படிகங்கள்
அடர்த்தி 6.3 கி/செமீ3
உருகுநிலை
கொதிநிலை 1,680 °C (3,060 °F; 1,950 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.56
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு, mS60
புறவெளித் தொகுதி C12/c1, No. 15
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தோரியம்(IV) குளோரைடு
தோரியம்(IV) புரோமைடு
தோரியம்(IV) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் புரோடாக்டினியம்(IV) புளோரைடு
யுரேனியம்(IV) புளோரைடு
நெப்ட்யூனியம்(IV) புளோரைடு
புளுட்டோனியம்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தோரியம் டெட்ரா புளோரைடு (Thorium(IV) fluoride) (ThF4) ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். இது வெண்மை நிறம் உடைய, நீர் உறிஞ்சும் திறன் உடைய துாளாகும். இச்சேர்மத்தை தோரியத்தை புளோரின் வாயுவுடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். 500 °செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையில், இது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துடன் வினைப்பட்டு ThOF2 ஐத் தருகிறது.[1]

பயன்கள்[தொகு]

இச்சேர்மம் மிதமான கதிரியக்கத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கூட பல அடுக்குகளைக் கொண்ட ஒளியியல் கருவிகளில் பிரதிபலிப்பிற்கு எதிரான பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் அசாதாரணமான ஒளியியல் ஊடுருவுதன்மையைக் கொண்டுள்ளது. அதன் வீச்சு 0.35–12 மைக்ரோ மீட்டர், ஆகும். இதன் கதிர்வீச்சானது ஆல்ஃபா துகள்களால் ஆனவையாக இருப்பதால் அவை வேறு ஒரு பொருளால் ஆன மெல்லிய அடுக்கு உறையினால் தடுக்கப்பட்டு விடலாம்.[2][3]

தோரியம் புளோரைடானது கார்பன் பிறை விளக்குகளில் (மின்பொறி விளக்கு) பயன்படுத்தப்பட்டது. இது திரைப்பட வீழ்த்தி மற்றும் தேடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட விளக்குகளிலும் அதிக அடர்த்தி கொண்ட ஒளிர்வைக் கொடுத்தது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]