வெள்ளீயம்(IV) புளோரைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயம்(IV) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
இசுடானிக் புளோரைடு, டின் டெட்ராபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-62-2 ![]() | |
EC number | 232-016-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 134654 |
SMILES
| |
பண்புகள் | |
SnF4 | |
வாய்ப்பாட்டு எடை | 194.704 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம் |
உருகுநிலை | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகி, tI10 |
புறவெளித் தொகுதி | I4/mmm, No. 139 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
வெள்ளீயம்(IV) ஃபுளோரைடு, என்பது வெள்ளீயம் மற்றும் புளோரின் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு SnF4 ஆகும். இது வெள்ளை நிறத் திண்மம். இதன் உருகுநிலை 700°C மேலே உள்ளது.[1]
வெள்ளீயம் உலோகம், புளோரின் வாயுவுடன்[2] வினைபுரிந்து SnF4 தயாரிக்கப்படுகிறது.
- Sn + 2F2 → SnF4
எனினும், எதிர்ப்பில்லாத உலோக புளுரைடு அடுக்கு உருவாக்கப்படுகிறது.
மேலும் இதன் மேற்பரப்பு எதிர்வினை அற்றதாக உள்ளது. SnCl4 மற்றும் நீரற்ற ஐதரசன் ப்ளோரைடு இரண்டும் வினைபுரியும் வினை இதன் மற்றொரு தொகுப்பு வினையாகும்.
- SnCl4 + 4HF → SnF4 + 4HCl
கார உலோக புளுரைடுகள் (எ. கா. KF) உடன் எக்சாபுளுரோசிடானேட்டுகளை உற்பத்தி (எ. கா K2SnF6), செய்கிறது. இது எண்முக SnF62− எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது. SnF4 ஒரு லூயிஸ் அமிலம் மற்றும் L2·SnF4 மற்றும் L·SnF4 என்ற கூட்டுவிளைபொருட்களை உற்பத்தி செய்கிறது.
அமைப்பு[தொகு]
டின்(IV) குளோரைடு, டின்(IV) புரோமைடு மற்றும் டின்(IV) அயோடைடு போன்ற மற்ற டின் டெட்ராஆலைடுகள் போல் அல்லாமல், டின்(IV) புளுரைடு, நான்முகத் திண்மவாள்கூறுகளான டின்னினைப் பெற்றுள்ளன. டின்(IV) புளுரைடு, எண்முகி டின் உடன் சமதள அடுக்கினைக் கொண்டுள்ளது. இங்கு எண்முகி வடிவத்தின் நான்கு மூலைகள் மற்றும் இரண்டு முனைகளில் பங்கீடு அல்லாத புளுரின் அணுக்கள் ஒன்று மற்றொன்று உடன் மறுபக்க மாற்றிய வடிவங்களில் உள்ளன. மற்ற டின்(IV) ஆலைடுகளை விட SnF4 (700 °C விட அதிகம்) அதிகளவு உருகுநிலை உடையது. ஒப்பீட்டளவில் (SnCl4, -33.3 °C; SnBr4, 31 °C; SnI4, 144 சி) குறைந்தளவு உருகுநிலையைக் கொண்டுள்ளன. தொகுதி 14 இல் உள்ள இலேசான உலோகங்களைப் பெற்றுள்ள டெட்ராபுளுரைடுகள் வடிவங்களை விட மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இது திண்ம நிலையில் மூலக்கூறு படிகங்களாக உள்ளது.
மேலும் காண்க[தொகு]
- சிடானசு ஃப்ளோரைடு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Greenwood, N. N.; Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd ). Oxford:Butterworth-Heinemann. பக். 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7506-3365-4.
- ↑ Holleman, A. F.; Wiberg, E.; Wiberg, N. (2001). Inorganic Chemistry, 1st Edition. Academic Press. பக். 908. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5.