யுரேனியம் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம் ஐம்புளோரைடு
β form
Monomer
இனங்காட்டிகள்
13775-07-0 N
ChemSpider 75545 N
InChI
  • InChI=1S/5FH.U/h5*1H;/q;;;;; 5/p-5 N
    Key: JNVYCANIFQDNST-UHFFFAOYSA-I N
  • InChI=1/5FH.U/h5*1H;/q;;;;;+2/p-5
    Key: YKLDBRIIJYAXGS-AACRGIKGAA
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [U+5].[F-].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
UF5
வாய்ப்பாட்டு எடை 333.02 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

யுரேனியம் ஐம்புளோரைடு (Uranium pentafluoride) என்பது UF5 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். யுரேனியமும் புளோரினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. தனிப்பட்ட ஒற்றைப்படி மூலக்கூறுகள் மற்றும் வடிவம் நீட்டிக்கப்பட்ட படிகக்கட்டி கூட்டமைப்புகள் என்ற இரு நிலைகளிலும் இச்சேர்மம் காணப்படுகிறது. யுரேனியம் ஐம்புளோரைடின் ஒற்றைப்படிகள் யுரேனியம் அறுமபுளோரைடு ஒளிச்சிதைவு அடைவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு சதுரபிரமிடு வடிவத்தில் உள்ளது.[1] α வடிவ ஒருங்கிணைப்பு பலபடி சங்கிலிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. ஐந்து புளோரைடு அணுக்களில் ஒன்று அடுத்துள்ள யுரேனியம் அணுவுடன் பாலம் அமைத்து இணைகிறது.[2] 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் யுரேனியம் அறுமபுளோரைடு கந்தக டைஆக்சைடுடன் சேர்ந்து α-வடிவ யுரேனியம் ஐம்புளோரைடாக ஒடுக்கப்படுகிறது.[3] இந்த யுரேனியம் ஐம்புளோரைடு 180 பாகை செல்சியசு வெப்பநிலையில் β-வடிவ யுரேனியம் ஐம்புளோரைடாக மாறுகிறது.[2]. இவ்வடிவம் சதுர எதிர்பட்டக கூட்டமைவு அமைப்பைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Onoe, J.; Nakamatsu, H.; Mukoyama, T.; Sekine, R.; Adachi, H.; Takeuchi, K. (1997). "Structure and Bond Nature of the UF5 Monomer". Inorg. Chem. 36 (9): 1934–1938. doi:10.1021/ic961237s. 
  2. 2.0 2.1 Howard, C. J.; Taylor, J. C.; Waugh, A. B. (1982). "Crystallographic parameters in α-UF5 and U2F9 by multiphase refinement of high-resolution neutron powder data". Journal of Solid State Chemistry 45 (3): 396–398. doi:10.1016/0022-4596(82)90185-2. Bibcode: 1982JSSCh..45..396H. 
  3. Eller, P. G.; Larson, A. C.; Peterson, J. R.; Ensor, D. D.; Young, J. P. (1979). "Crystal structures of α-UF5 and U2F9 and spectral characterization of U2F9". Inorganica Chimica Acta 37 (2): 129–133. doi:10.1016/S0020-1693(00)95530-0. 
  4. Taylor, J. C.; Waugh, A. B. (1980). "Neutron diffraction study of β-uranium pentafluoride between 77 and 403 K". Journal of Solid State Chemistry 35 (2): 137–147. doi:10.1016/0022-4596(80)90485-5. Bibcode: 1980JSSCh..35..137T. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_ஐம்புளோரைடு&oldid=2052727" இலிருந்து மீள்விக்கப்பட்டது