யுரேனைல் சல்பேட்டு
| |||
பண்புகள் | |||
---|---|---|---|
UO2SO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 366.09 கி/மோல் | ||
அடர்த்தி | 3,28 கி/செ.மீ3 @ 20 °செ | ||
27,5 கி/100 மி.லி 25 °செ தண்னீரில் | |||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | யுரேனைல் குளோரைடு யுரேனைல் நைட்ரேட்டு யுரேனைல் கார்பனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
யுரேனைல் சல்பேட்டு (Uranyl sulfate) என்பது UO2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். யுரேனியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் தூய்மையான படிகநிலையில் உள்ளபோது எலுமிச்சை மஞ்சள் நிறத்தில், மணல் போன்ற திண்மமாக நெடியற்றுக் காணப்படுகிறது.
நுண்ணோகியியலில் எதிர்மறை சாயமேற்றவும் உயிரியியலில் தடங்காணியாகவும் யுரேனைல் சல்பேட்டு பயன்படுகிறது. 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓருபடித்தான நீர்க்கரைசல் அணுக்கரு உலை சோதனையில் 565 கிராம் U-235 14.7% யுரேனைல் சல்பேட்டாக செறிவூட்டப்பட்டு ஒரு எரிபொருளாகச் சுற்றுக்கு விடப்பட்டது.
யுரேனியம் தாதுக்களை அரைக்கும் அமிலச்செயல் முறையில் அமிலக்கழுவலுக்குத் தயாராக உள்ள கரைசலில் இருந்து, யுரேனைல் சல்பேட்டை வீழ்படிவாக்கல் செயல் நிகழ்கிறது. இச்செயல்முறையில் பகுதியாகச் சுத்திகரிக்கப்பட்ட மஞ்சள் அப்பம்[1] எனப்படும் யுரேனியத்தாது உற்பத்தி செய்யப்படுகிறது.
பொட்டாசியம் யுரேனைல் சல்பேட்டைப் (K2UO2(SO4)2) பயன்படுத்தி கதிரியக்கம் கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Metallurgy". MQes Uranium Inc. Archived from the original on 15 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.