அமோனியம் யுரேனைல் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் யுரேனைல் கார்பனேட்டு
Ammonium uranyl carbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம்(VI)டையாக்சைடு டெட்ரா அமோனியம் டிரைகார்பனேட்டு
வேறு பெயர்கள்
யுரேனைல் அமோனியம் கார்பனேட்டு
ஏயூசி
பண்புகள்
UO2CO3•2(NH4)2CO3
வாய்ப்பாட்டு எடை 522.199 கி/மோல்
தோற்றம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம்[1]
அடர்த்தி 2.72[1]
உருகுநிலை 165 மற்றும் 185 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இடையில் சிதைவடையும்
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
புறவெளித் தொகுதி C2/c
Lattice constant a = 10•68, b = 9•38, c = 12•85
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அமோனியம் யுரேனைல் கார்பனேட்டு (Ammonium uranyl carbonate) என்பது UO2CO3•2(NH4)2CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனைல் அமோனியம் கார்பனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. யுரேனியத் தொழிற்சாலைகளில் இதை சுருக்கமாக யுஏசி என்கிறார்கள். [2] யுரேனியம் அறுபுளோரைடை (UF6) யுரேனியம் ஈராக்சைடாக (UO2) மாற்றும் செயல்முறையில் ஒரு முக்கியமான வேதியியல் கூறாக இது கருதப்படுகிறது. [3]

அமோனியம் யுரேனைல் கார்பனேட்டுடன் நீராவியையும் ஐதரசனையும் 500 முதல் 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்த்தால் யுரேனியம் ஈராக்சைடு கிடைக்கும். நீரிய யுரேனைல் நைட்ரேட்டின் வடிநீர்மத்தை அமோனியம் பைகார்பனேட்டுடன் சேர்த்து சூடுபடுத்தி அமோனியம் யுரேனைல் கார்பனேட்டை திண்மநிலை விழ்படிவாக உருவாகிறது. [4] கரைசலிலிருந்து இத்திண்மம் பிரிக்கப்பட்டு மெத்தனால் சேர்த்து உலர்த்தி ஐதரசனுடன் உயர்வெப்பநிலைக்கு சூடாக்கினால் நேரடியாக யுரேனியம் ஈராக்சைடு தூளாகத் தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்.

அமோனியம் யுரேனைல் கார்பனேட்டு யுரேனியம் ஈராக்சைடு தூளானது எளிமையான பாய்வும் 10 µ அளவுக்கு சொரசொரப்பும் புரைமமும் 5மீ2/கிராம் மேற்பரப்பும் கொண்டு கட்டியாக்கலுக்கு பொருத்தமானதாக உள்ளது. மணித்திரளாக்கம் என்ற படிநிலை இம்முறையில் தவிர்க்கப்படுகிறது. அணுக்கரு எரிபொருள் கட்டுருவாக்கத்தில் யுரேனியம் ஈராக்சைடு மாற்றம் பெரும்பாலும் முதல் படிநிலையாக மேற்கொள்ளப்படுகிறது. [5] தென் கொரியா [6], அர்கெந்தினா [7] போன்ற நாடுகளில் அமோனியம் யுரேனைல் கார்பனேட்டு செயால்முறை பின்பற்றப்படுகிறது. இச்செயல்முறையில் குறைந்த காற்று அல்லது ஆக்சிசன் முன்னிலையில் உயர்வெப்பநிலைக்கு சூடாக்கல், ஒடுக்கம், நிலைநிறுத்தம் போன்ற செயல்கள் உடனிகழ்வாக செங்குத்து பாய்ம அடுக்கு அணுக்கரு உலையில் செயற்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் அணுக்கரு எரிபொருளுக்குத் தேவையான யுரேனியம் ஈராக்சைடை அமோனியம் டையுரேனேட்டு செயல்முறையின் வழியே தயாரிக்கிறார்கள். இச்செயல்முறை பலபடிநிலைகள் கொண்டதாகும்.

மஞ்சள் அப்பத்தின் பலவடிவங்களில் அமோனியம் யுரேனைல் கார்பனேட்டும் ஒன்றாகும்.[1] குவியல்மீட்புச் செயல்முறையின் விளைபொருளாக இங்கு இச்சேர்மம் உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Graziani, R.; Bombieri, G.; Forsellini, E. (1972). "Crystal structure of tetra-ammonium uranyl tricarbonate". Journal of the Chemical Society, Dalton Transactions (19): 2059. doi:10.1039/DT9720002059. 
  2. Mellah, A.; Chegrouche, S.; Barkat, M. (2007-03-01). "The precipitation of ammonium uranyl carbonate (AUC): Thermodynamic and kinetic investigations" (in en). Hydrometallurgy 85 (2–4): 163–171. doi:10.1016/j.hydromet.2006.08.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-386X. 
  3. Krishnan, V. N.; Visweswaraih, M. S.; Shringarpure, P. D.; Koppiker, K. S.; Date, V. G. (in English). Studies on the preparation and characterisation of ammonium uranyl carbonate (AUC). http://inis.iaea.org/Search/search.aspx?orig_q=RN:24000267. 
  4. Johnson, Timothy J.; Sweet, Lucas E.; Meier, David E.; Mausolf, Edward J.; Kim, Eunja; Weck, Philippe F.; Buck, Edgar C.; McNamara, Bruce K. (2015-05-22). "Dehydration of uranyl nitrate hexahydrate to uranyl nitrate trihydrate under ambient conditions as observed via dynamic infrared reflectance spectroscopy". Chemical, Biological, Radiological, Nuclear, and Explosives (CBRNE) Sensing XVI 9455: 945504. doi:10.1117/12.2179704. 
  5. Glazoff, Michael; J. van Rooen, Isabella; D. Coryell, Benjamin; J. Parga, Clemente (2016-05-05). Comparison of Nuclear Fuels for TREAT: UO2 vs. U3O8. https://www.researchgate.net/publication/305398098. 
  6. Tae-Joon, Kim; Kyung-Chai, Jeong; Jin-Ho, Park; In-Soon, Chang; Cheong-Song, Choi (1994-05-01). "Crystallization characteristics of ammonium uranyl carbonate (AUC) in ammonium carbonate solutions" (in en). Journal of Nuclear Materials 209 (3): 306–314. doi:10.1016/0022-3115(94)90268-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. 
  7. Dominguez, C. A.; Leyva, A. G.; Marajofsky, A. (in Spanish). Conditions study of ammonium uranyl tricarbonate precipitation through ammonium carbonate. http://inis.iaea.org/Search/search.aspx?orig_q=RN:24046621. 

மேலும் படிக்க[தொகு]