யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு
Uranyl zinc acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிங் பிசு(அசிட்டேட்டோ-O) டையாக்சோயுரேனேட்டு
வேறு பெயர்கள்
துத்தநாக யுரேனைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
10138-94-0 Y
பண்புகள்
ZnUO2(CH3COO)4
வாய்ப்பாட்டு எடை 571.59 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு (Uranyl zinc acetate) என்பது ZnUO2(CH3COO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட யுரேனியத்தின் சேர்மமாகும்.

சோடியத்தின் அடர்த்தியை உறுதி செய்யும் சோதனைப் பொருளாக ஆய்வகங்களில் யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியத்தை யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டுடன் வீழ்படிவாக்கும் அளவறி வீழ்படிவாக்கல் முறை மற்றும் சோடியத்தை யுரேனைல் துத்தநாக சோடியம் அசிட்டேட்டாக (UO2)3ZnNa(CH3CO2)9·6H2O. மாற்றி உறுதிப்படுத்தும் எடையறி பகுப்பாய்வு முறை ஆகியன இவ்விரண்டு முறைகளாகும். சீசியம் மற்றும் ருபீடியம் தனிமங்கள் இவ்வினையில் இருப்பது பிரச்சினையில்லை ஆனால் பொட்டாசியம் மற்றும் இலித்தியம் தனிமங்கள் இருந்தால் கண்டிப்பாக வினைச் செயல்முறைக்கு முன் அவை நீக்கப்பட வேண்டும்[1][2].

சிறுநீரில் உள்ள சோடியத்தின் அளவை கண்டறிவதற்கு இம்முறை மிகமுக்கியமான முறையாகும். இந்த அளவின் மூலமாகவே நோய் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிர் மஞ்சள் NaZn(UO2)3(C2H3O2)9 சேர்மமானது மிகச்சில கரையாத சோடியம் சேர்மங்களுள் ஒன்று என்பதால், சில சமயங்களில் யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு சோடியம் சோதனைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆய்வகப் பயன்கள்[தொகு]

இருமெத்தில் கார்பனேட்டை , தொலுவீன்-2,4-இருசமசயனேட்டாக மாற்றுவதற்கு வினையூக்கியாக யுரேனைல் துத்தநாக அசிட்டேட்டு பயன்படுகிறது..[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Barber, H. H.; Kolthoff, I. M. (1928). "A specific Reagent for the Rapid Gravimetric Determination of Sodium". J. Am. Chem. Soc. 50 (6): 1625. doi:10.1021/ja01393a014. 
  2. Barber, H. H.; Kolthoff, I. M. (1929). "Gravimetric Determination of Sodium by the Uranyl Zinc Acetate Method. II. Application in the Presence of Rubidium, Cesium, Potassium, Lithium, Phosphate or Arsenate". J. Am. Chem. Soc. 51 (11): 3233. doi:10.1021/ja01386a008. 
  3. Wang, Y.; Zhao, X.; Li, F.; Wang, S.; Zhang, J. (2001). "Catalytic synthesis of toluene-2,4-diisocyanate from dimethyl carbonate". Journal of Chemical Technology & Biotechnology 76 (8): 857. doi:10.1002/jctb.455.