யுரேனைல் ஐதராக்சைடு
இனங்காட்டிகள் | |
---|---|
211573-15-8 | |
ChemSpider | 4576989 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5465112 |
| |
UN number | 2909 |
பண்புகள் | |
UH 2O 4 | |
வாய்ப்பாட்டு எடை | 304.0424 கி.மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனைல் ஐதராக்சைடு (Uranyl hydroxide) என்பது ஒற்றைப்படி நிலையில் UO2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் இருபடி நிலையில் (UO2)2(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.. இவ்விரு வடிவ சேர்மங்களும் பொதுவாக நீர்ம ஊடக நிலையில் காணப்படுகின்றன. நடுநிலை அமிலக்காரக் குறியீடு (pH) கொண்ட யுரேனியக் கரைசல்களை ஆக்சிசனேற்றம் செய்து யுரேனைல் ஐதராக்சைடு நீரேற்று கூழ்ம மஞ்சள் அப்பமாக வீழ்படிவாக்கப்படுகிறது.
யுரேனைல் ஐதராக்சைடுகள் ஒரு காலத்தில் கண்ணாடி தயாரிப்பு, பீங்கான் தொழிலில் கண்ணாடி வகை நிலை மற்றும் உயர் வெப்பநிலை எரிப்பு அறைகளுக்கான சாயங்கள் தயாரிப்பு ஆகியனவற்றிற்காகப் பயன்படுத்தப்பட்டது.
கண்ணாடிகளில் கார இருயுரேனேட்டுகள் பயன்பாடு தொடங்கிய பின்னர், கண்ணாடிகள் மஞ்சள் நிறத்தைக் கடத்தவும் பச்சை நிறத்தை எதிரொளிக்கவும் செய்தன. மேலும் இவை புற ஊதாக் கதிரொளியில் இரு நிறங்காட்டிகளாகவும் ஒளிர்பொருளாகவும் மாறிவிட்டன.
கதிரியக்கத் தன்மையும் விந்தை உரு பிறப்பிற்கு காரணியாகவும் யுரேனைல் ஐதராக்சைடு இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- The Structure of the a Form of Uranyl Hydroxide பரணிடப்பட்டது 2018-11-01 at the வந்தவழி இயந்திரம்
- Alexander, C.A. (2005) "Volatilization of urania under strongly oxidizing conditions," Journal of Nuclear Materials, 346, 312–318.