ஒடுக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒடுக்கம் (Quarantine) என்பது பெரும்பாலும் நோய் அல்லது தீங்குயிர் போன்றவை பரவாமல் தடுக்கும்பொருட்டு மக்களின் இயக்கத்தின்மீதும் சரக்குகளின் போக்குவரத்தின்மீதும் இழைக்கும் ஒருவகைத் தடையாகும். அதாவது மக்களையும் சரக்குகளையும் ஒடுக்கும் நடவடிக்கையாகும். சில சமயங்களில் மக்கள் தாங்களே ஒடுங்கிக்கொள்வதுமுண்டு. அந்த ஒடுக்கம் தன்னொடுக்கம் (self-quarantine) ஆகும்.
உறுதிப்படாத நோய்த்தீர்மானம் கிடைக்காவிட்டாலும் ஏற்கெனவே தொற்றுநோயோடு தொடர்புகொண்டிருக்கலாம் என்று ஐயத்திற்காளாவோரின் இயக்கத்தடைக்கே பெரும்பாலும் இந்தக் கிளவி வழங்குகிறது. இருப்பினும் இந்தக் கிளவி மருத்துவத் தனிமைப்பாடு என்னும் கிளவிக்கு ஈடாகவும் அடிக்கடி வழங்குகிறது; ஆயினும் மருத்துவத் தனிமைப்பாடு என்பது தங்களுக்குத் தொற்றுநோய் தொற்றியுள்ளது என்று உறுதிப்பட்ட நோய்த்தீர்மானம் உடையவர்களை உடல்நலம் வாய்ந்த பிற மக்களினின்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையைக் குறிக்கும்.