உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனைல் மெட்டாபாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனைல் மெட்டாபாசுபேட்டு
இனங்காட்டிகள்
25734-76-3 Y
ChemSpider 25933972
பண்புகள்
UP2O8
வாய்ப்பாட்டு எடை 427.971 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யுரேனைல் மெட்டாபாசுபேட்டு (Uranyl metaphosphate) என்பது [UO2(PO3)2]n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம், பாசுபரசு, ஆக்சிசன் முதலிய தனிமங்கள் சேர்ந்து இது உருவாகிறது. UO2(H2PO4)2•3H2O.[1] சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமாக இந்த நீண்ட சங்கிலி சேர்மம் உருவாகிறது. NaUO2(PO3)3 மற்றும் CsUO2(PO3)3 போன்ற இரட்டை உப்புகள் சில அறியப்படுகின்றன. [2]

மிக உயர்ந்த வெப்பநிலையில் யுரேனைல் மெட்டாபாசுபேட்டு ஆக்சிசனை விடுவித்து UP2O7 சேர்மமாக சிதைவடைகிறது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kamo, Mutsukazu; Ohashi, Shigeru (1970). "Thermal Decomposition of Uranyl Dihydrogen Orthophosphate Trihydrate". Bulletin of the Chemical Society of Japan 43 (1): 84–89. doi:10.1246/bcsj.43.84. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. 
  2. Lavrov, A. V. Study of condensed uranyl phosphates. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1979. 15 (6): 942-946. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
  3. Barten, H. (1988). "The thermochemistry of uranyl phosphates". Thermochimica Acta 126: 375–383. doi:10.1016/0040-6031(88)87282-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-6031.