இட்ரியம்(III) புளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
இட்ரியம் டிரைபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13709-49-4 | |
| ChemSpider | 75502 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83679 |
| |
| பண்புகள் | |
| YF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 145.90 கிராம் மோல்−1 |
| தோற்றம் | வெண்மை நிற தூள் |
| அடர்த்தி | 4.01 கி செ.மீ−3 |
| உருகுநிலை | 1,387 °C (2,529 °F; 1,660 K) |
| கொதிநிலை | 2,230 °C (4,050 °F; 2,500 K) |
| கரையாது | |
| அமிலம்-இல் கரைதிறன் | கரையும் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.51 (500 நானோமீட்டர்) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் oP16, இடக்குழு = Pnma, No. 62 |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்ரியம்(III) குளோரைடு இட்ரியம்(III) புரோமைடு இட்ரியம்(III) அயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம்(III) புளோரைடு இலந்தனம்(III) புளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இட்ரியம்(III) புளோரைடு (Yttrium(III) fluoride) என்பது YF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இட்ரியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் தூய நிலையில் இது கிடைப்பதில்லை. புளோரைடு கனிமங்களில் டுவெய்டைட்டு- (Y) (Y,Na)6Ca6Ca6F42 மற்றும் காக்ரினைட்டு-(Y) NaCaY(F,Cl)6 வகை சேர்மங்களாக இது கலந்துள்ளது. சில சமயங்களில் புளோரைட்டு கனிமத்திலும் கூட்டுக் கலவையாக இட்ரியத்துடன் சேர்ந்துள்ளது.
தயாரிப்பு
[தொகு]புளோரினுடன் இட்ரியா எனப்படும் இட்ரியம் ஐதராக்சைடை ஐதரோ புளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் YF3 உருவாகிறது.
- Y(OH)3 + 3HF → YF3 + 3H2O
தோற்றம்
[தொகு]வாய்மிரைட் கனிமமாக இட்ரியம்(III) புளோரைடு தோன்றுகிறது[1]
உலோக இட்ரியம் தயாரிப்பிலும், மென்படலங்கள், கண்ணாடிகள், பீங்கான்கள் தயாரிப்பிலும் இட்ரியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
தீங்குகள்
[தொகு]அமிலங்கள், ஈரப்பதம், தீவிர செயலூக்கம் மிக்க உலோகங்கள் ஆகியவற்றிடமிருந்து இச்சேர்மத்தை விலக்கி வைக்கவேண்டும்.