வினைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினைல் புளோரைடு
Vinylfluoride.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
வினைல்புளோரைடு, புளொரோயெத்திலீன், மோனோபுளோரோயெத்திலீன், வினைல் புளோரைடு ஓருரு, ஆர் 1141,
இனங்காட்டிகள்
75-02-5 Yes check.svgY
ChEBI CHEBI:51314 Yes check.svgY
ChemSpider 6099 Yes check.svgY
EC number 200-832-6
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19185 Yes check.svgY
பப்கெம் 6339
வே.ந.வி.ப எண் YZ7351000
UNII 2598465ICX Yes check.svgY
பண்புகள்
C2H3F
வாய்ப்பாட்டு எடை 46.04 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் இலேசான ஈதர் மணம்[1]
அடர்த்தி 0.636 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை −72.2 °C (−98.0 °F; 201.0 K)
இலேசாக கரையும்
ஆவியமுக்கம் 25.2 atm (370.4 psi)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு எளிதில் தீப்பற்றும் (F+)
R-சொற்றொடர்கள் R12
S-சொற்றொடர்கள் S9, S16, S33
Autoignition
temperature
385 °C (725 °F; 658 K)
வெடிபொருள் வரம்புகள் 2.6 - 21.7%
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
நேர எடை சராசரி மில்லியனுக்கு 5 பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வினைல் புளோரைடு (Vinyl fluoride) C2H3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு வகைச் சேர்மமாகும். நிறமற்றதாகவும் இலேசான ஈதர் மணமும் கொண்டிருக்கும். புளோரோ பலபடியான பாலிவினைல்புளோரைடை தயாரிக்க உதவும் முன்னோடி ஓருருவாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

வினைல் புளோரைடு முதன்முதலில் 1901 ஆம் ஆண்டு பெல்சிய நாட்டு வேதியியலாளர் பிரெடெரிக் சுவார்ட்சு என்பவரால் தயாரிக்கப்பட்டது. இவரேதான் 1892 ஆம் ஆண்டில் குளோரோ புளூரோகார்பன்களையும் முதன்முதலில் தயாரித்தார். துத்தநாகம், 1,1-இருபுளோரோ-2-புரோமோயீத்தேனுடன் ஈடுபடும் வினையை இதற்காகப் பயன்படுத்தினார். வினைல் புளோரைடு தொழில்ரீதியாக இரண்டு வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அசிட்டிலீன் மற்றும் ஐதரசன் புளோரைடு இரண்டும் பாதரச-வினையூக்கியின் முன்னிலையில் ஈடுபடும் வினை ஒரு வழிமுறையாகும். :[2]

HC≡CH + HF → CH2=CHF

1,1- குளோரோபுளோரோயீத்தேன் சேர்மத்திலிருந்தும் வினைல் புளோரைடைத் தயாரிக்க முடியும்.

CH3CHClF → CH2=CHF + HCl

பாதுகாப்பு[தொகு]

வினைல் புளோரைடு ஐஏஆர்சி எனப்படும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள குழு 2ஏ வகை புற்றுநோய் வளர்த்தி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0660". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Günter Siegemund, Werner Schwertfeger, Andrew Feiring, Bruce Smart, Fred Behr, Herward Vogel, Blaine McKusick “Fluorine Compounds, Organic” Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2002. எஆசு:10.1002/14356007.a11_349

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_புளோரைடு&oldid=3644020" இருந்து மீள்விக்கப்பட்டது