உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனியம் ஆறாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம் ஆறாக்சைடு
பண்புகள்
UO6
வாய்ப்பாட்டு எடை 334.0288 கி/மோல்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

யுரேனியம் ஆறாக்சைடு (Uranium hexoxide) என்பது வழக்கத்திற்கு மாறான ஆனால் யுரேனியம் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்களின் கருத்தியலான சேர்மமாகும். இச்சேர்மத்தில் யுரேனியம் அணுவுடன் ஆறு ஆக்சிசன் அணுக்கள் இணைந்து காணப்படும்[1][2]. யுரேனியம் ஆறாக்சைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு UO6 ஆகும்.

அமைப்பு

[தொகு]

யுரேனியம் ஆறாக்சைடு எண்முக அமைப்பு சீரொழுங்கில் இருப்பதாக முன்கணித்துக் கூறப்படுகிறது. மற்ற அமைப்புகளின் சீரொழுங்கு வாய்ப்புகள் குறித்து ஆராயப்படுகிறது. 1Oh வடிவில் உள்ள ஆக்சிசன் அணுக்கள் ஆக்சைடு அயனிகளாகவும் (O2−), 1D3 வடிவில் மூன்று பெராக்சைடு அயனிகளாகவும் (O22−), 3D2h வடிவில் இரண்டு ஆக்சோ அயனிகள் மற்றும் இருசோடி மேலாக்சைடுகளும் காணப்படுகின்றன.(O2).[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. எஆசு:10.1016/S0009-2614(00)00958-1
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. 1 2 எஆசு:10.1021.2Fjp102107n
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_ஆறாக்சைடு&oldid=2052731" இலிருந்து மீள்விக்கப்பட்டது