பேரியம் பர்மாங்கனேட்டு
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 7787-36-2 | |
| EC number | 232-110-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24587 |
| |
| பண்புகள் | |
| BaMn2O8 | |
| வாய்ப்பாட்டு எடை | 375.198 கி/மோல் |
| தோற்றம் | அடர் கருநீல முதல் பழுப்பு வரையான படிகங்கள் |
| மணம் | மணமற்றது |
| அடர்த்தி | 3.77 g/cm3 |
| உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) |
| 62.5 கி/100 மி.லி (29 °செல்சியசு) | |
| கரைதிறன் | ஆல்ககாலில் சிதைகிறது |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய் சதுரம் |
| தீங்குகள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் பர்மாங்கனேட்டு இசுடிரான்சியம் பர்மாங்கனேட்டு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பேரியம் பர்மாங்கனேட்டு (Barium permanganate) என்பது BaMn2O8 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதியியல் சேர்மமாகும்[1].
தயாரிப்பு
[தொகு]ஒரே நேரத்தில் நிகழும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் காரணமாக மென்மையான அமிலக் கரைசலில் பேரியம் மாங்கனேட்டு விகிதச்சமமற்று பிரிவதால் பேரியம் பர்மாங்கனேட்டு தோன்றுகிறது[2]. வலிமையான ஆக்சிசனேற்றிகளைக் கொண்டு பேரியம் மாங்கனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தும் பேரியம் பர்மாங்கனேட்டை தயாரிக்கலாம். பேரியம் மாங்கனேட்டின் நீர்த்த கரைசலில்ல் செயல்முறை மெதுவாக நிகழ்வதன் காரணம் மாங்கனேட்டின் குறைவான கரையும் தன்மையைச் சார்ந்திருக்கிறது[2].
வினைகள்
[தொகு]பேரியம் பர்மாங்கனேட்டு கரைசலுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பர்மாங்கனிக் அமிலம் தயாரிக்க முடியும். கரைசலில் கரையாத உடன் விளை பொருளான பேரியம் சல்பேட்டு வடிகட்டல் முறையில் பிரிக்கப்படுகிறது[2].
- BaMn2O8 + H2SO4 → 2 HMnO4 + BaSO4
வினையில் சேர்க்கப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்க வேண்டும். அடர்த்தியான கந்தக அமிலத்துடன் பர்மாங்கனேட்டு வினை புரிந்தால் நீரிலியான மாங்கனீசு எப்டாக்சைடு உருவாகிவிடும்.