உள்ளடக்கத்துக்குச் செல்

பேரியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் அசிட்டேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பேரியம் டையசிட்டேட்டு
இனங்காட்டிகள்
543-80-6 Y
Abbreviations Ba(OAc)2
ChemSpider 10515 Y
EC number 208-849-0
InChI
  • InChI=1S/2C2H4O2.Ba/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2 Y
    Key: ITHZDDVSAWDQPZ-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C2H4O2.Ba/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2
    Key: ITHZDDVSAWDQPZ-NUQVWONBAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10980
வே.ந.வி.ப எண் AF4550000
  • [Ba+2].[O-]C(=O)C.[O-]C(=O)C
UNII FBA31YJ60R Y
பண்புகள்
C4H6BaO4
வாய்ப்பாட்டு எடை 255.42 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.468 g/cm3 (நீரிலி)
2.19 g/cm3 (ஒற்றை நீரேறி)
உருகுநிலை 725 °C (1,337 °F; 998 K)
55.8 g/100 mL (0 °C)
72 கி/100மி.லி (20 °செல்சியசு)
கரைதிறன் எத்தனால் கரைப்பானில் சிறிதளவு கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உட்கொள்வதால் தீங்குண்டு
Lethal dose or concentration (LD, LC):
921 mg/kg (oral, rat)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பேரியம் அசிட்டேட்டு (Barium acetate) Ba(C2H3O2)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் உப்பு ஆகும்.

தயாரிப்பு

[தொகு]

பேரியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தை வினைபுரியச் செய்வதன் மூலமாக பொதுவாக பேரியம் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது[2].

BaCO3 + 2CH3COOH → (CH3COO)2Ba + CO2 + H2O

கரைசல் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வினையில் பேரியம் அசிட்டேட்டு படிகமாக வெளிவருகிறது. பேரியம் கார்பனேட்டுக்கு மாற்றாக இவ்வினையில் பேரியம் சல்பைடையும் பயன்படுத்த முடியும்.

BaS + 2CH3COOH → (CH3COO)2Ba +H2S

இங்கும் கரைப்பான் ஆவியாக்கப்பட்டு பேரியம் அசிட்டேட்டு படிகமாக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

வெண்மை நிறத் துகள்களாக காணப்படும் பேரியம் அசிட்டேட்டு 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதிக அளவு கரைதிறன் பெற்றுள்ளது. அதாவது 100 கிராம் தண்ணீரில் 55.8 கிராம் அளவு பேரியம் அசிட்டேட்டைக் கரைக்க முடியும். பேரியம் அசிட்டேட்டைச் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது.

வினைகள்

[தொகு]

பேரியம் அசிட்டேட்டைக் காற்றில் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது. மேலும் இது கந்தக அமிலம், ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து முறையே சல்பேட்டு, குளோரைடு மற்றும் நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது.

பயன்கள்

[தொகு]

பேரியம் அசிடேட்டு நெசவுத் தொழிலில் நெசவுத் துணிகளில் அச்சிடும் போது நிறமூட்டியாகவும், வண்ணப்பூச்சுகள் , மெருகூட்டிகளில் மற்றும் உயவு எண்ணெய்களில் உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலில், மற்ற அசிட்டேட்டுகள் தயாரிக்கவும் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,பேரியம் அசிடேட்டு உயிரைக் கொல்லும் ஒரு வலிமையான நஞ்சாகவும் இருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1], JT Baker
  2. Barium acetate பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம், hillakomem.com, retrieved 30 June 2009

உசாத்துணை நூல்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_அசிட்டேட்டு&oldid=3371289" இலிருந்து மீள்விக்கப்பட்டது