பேரியம் செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் செலீனேட்டு
இனங்காட்டிகள்
7787-41-9 Y
ChemSpider 118681
EC number 232-113-8
InChI
 • InChI=1S/Ba.H2O4Se/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
  Key: ZIGAPMSTBOKWRT-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 134655
 • [O-][Se](=O)(=O)[O-].[Ba+2]
UNII XEW84XNI9U
UN number 2630
பண்புகள்
BaSeO4
வாய்ப்பாட்டு எடை 280.29
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[1]
0.0118 g (20 °C)
0.0138 g (100 °C)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H373, H410
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பேரியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் செலீனேட்டு
கால்சியம் செலீனேட்டு
இசுட்ரோன்சியம் செலீனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


பேரியம் செலீனேட்டு (Barium selenate) என்பது BaSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பேரியம் சல்பேட்டு சேர்மத்தின் வடிவமொத்த கட்டமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் பேரியம் சல்பேட்டைக் காட்டிலும் 18 மடங்கு அதிகமான கரைதிறனையும் குறைவான நிலைப்புத் தன்மையையும் கொண்டுள்ளது.[3]

தயாரிப்பு[தொகு]

கரையக்கூடிய பேரியம் உப்பு ஏதாவதொன்றுடன் சோடியம் செலீனேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் செலினேட்டைப் பெறலாம்.[1]

BaCl2 + Na2SeO4 → BaSeO4↓ + 2 NaCl

பண்புகள்[தொகு]

வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாக உள்ள பேரியம் செலீனேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும்.[4] 425 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கப்படும் போது, இச்சேர்மம் சிதைகிறது. மற்றொரு பேரியம் செலீனேட்டு சேர்மமான பேரியம் இருசெலீனேட்டு என்ற சேர்மமும் (BaSe2O7) அறியப்படுகிறது. இது Pnma இடக்குழுவில் (எண். 62) a = 8.993 Å, b = 5.675 Å, c = 7.349 Å என்ற அணிக்கோவை அளவுருக்களில் செஞ்சாய்சதுர வடிவ பேரைட்டு வகை படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.[5]

பயன்கள்[தொகு]

கால்நடை தீவனப் பயிர்களை மேய்ச்சலில் செலினியம் மெதுவான வெளியீடு மூலமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் மேய்ச்சல் விலங்குகளுக்கு செலினியம் வழங்குவதையும் இது உறுதிசெய்கிறது. சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தீவன கூட்டுசேர்க்கையாக இதை நேரடியாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.[6][7] ஐதரசன் ஓட்டத்தில் பேரியம் செலீனேட்டைச் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் பேரியம் செலீனைடைப் பெறலாம்.:[8]

BaSeO4 + 4 H2 → BaSe + 4 H2O

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Andara, A.; Salvado, M. A.; Fernández-González, Á.; García-Granda, S.; Prieto, M. (Apr 2005). "Crystal structure of barium selenate, BaSeO4". Zeitschrift für Kristallographie - New Crystal Structures 220 (1–4): 5–6. doi:10.1524/ncrs.2005.220.14.5. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. http://dx.doi.org/10.1524/ncrs.2005.220.14.5. 
 2. "Barium selenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
 3. 无机化学丛书 第五卷 氧 硫 硒分族. 3. Selenates和碲酸盐. pp 392
 4. "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de. பார்க்கப்பட்ட நாள் 2024-01-25.
 5. Andara, A.; Salvado, M. A.; Fernández-González, Á; García-Granda, S.; Prieto, M. (2005-04-01). "Crystal structure of barium selenate, BaSeO4" (in de). Zeitschrift für Kristallographie - New Crystal Structures 220 (1–4): 5–6. doi:10.1524/ncrs.2005.220.14.5. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.2005.220.14.5/html. 
 6. "Wirkstoff: Bariumselenat - Chemie". www.vetpharm.uzh.ch. பார்க்கப்பட்ட நாள் 2024-01-25.
 7. Durchführungsverordnung (EU) 2015/446 der Kommission vom 17. März 2015 zur Änderung der Verordnung (EU) Nr. 37/2010 hinsichtlich des Stoffs "Bariumselenat" Text von Bedeutung für den EWR (in ஜெர்மன்), 2015-03-17, பார்க்கப்பட்ட நாள் 2024-01-25
 8. Handbuch der präparativen anorganischen Chemie. 2 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-87813-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_செலீனேட்டு&oldid=3908499" இலிருந்து மீள்விக்கப்பட்டது