மக்னீசியம் பொலோனைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் பொலோனைடு | |
பண்புகள் | |
MgPo | |
வாய்ப்பாட்டு எடை | 233.29 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிறம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
மக்னீசியம் பொலோனைடு அல்லது மகனீசியம் பொலோனைடு (Magnesium Polonide) என்பது MgPo என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்ட பொலோனியச் சேர்மங்களில் மக்னீசியமும் பொலோனியமும் சேர்ந்து உருவாகின்ற இப்பொலோனைட்டுச் சேர்மமும் ஒன்றாகும்.[2]
தயாரிப்பு[தொகு]
மக்னீசியத்தையும் பொலோனியத்தையும் சேர்த்து 300 முதல் 400 °செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி மக்னீசியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.[1].
வடிவமைப்பு[தொகு]
நிக்கல், ஆசனிக்கு ஆகிய தனிமங்களைப் பகுதிப்பொருள்களாகக் கொண்டுள்ள நிக்கலைன் அல்லது நிக்கோலைடு எனப்படும் கனிமத்தின் வடிவமைப்பையும் (சாலகம்) a = 434.5 பிமீ மற்றும் c = 707.7 பிமீ என்ற சட்டக அளபுரு மதிப்புகளையும் மக்னீசியம் பொலோனைடு பெற்றுள்ளது.[1][2] சல்பைடு, செலினைடு மற்றும் தெல்லூரைடு போன்ற இதற்கு நேரிணையான மற்றப் பொலோனைடுகள் போல வழக்கமான சமவடிவ மூலகங்களை இச்சேர்மம் கொண்டிருக்கவில்லை. ஆனால், பாதரசப் பொலோனைடு மட்டுமே இதன் பண்புகளுடன் ஒத்திருக்கிறது.[3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. பக். 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236046. http://www.google.com/books?id=8qePsa3V8GQC. பார்த்த நாள்: சூன் 17, 2012.
- ↑ 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 899. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA.
- ↑ Witteman, W. G.; Giorgi, A. L.; Vier, D. T. (1960). "The Preparation and Identification of Some Intermetallic Compounds of Polonium". Journal of Physical Chemistry (அமெரிக்க வேதியியல் குமுகம்) 64: 434–440. doi:10.1021/j100833a014. http://www.osti.gov/energycitations/product.biblio.jsp?osti_id=4190680. பார்த்த நாள்: சூன் 17, 2012.