மக்னீசியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் சல்பேட்டு
Magnesium sulfate
Magnesium sulfate anhydrous.jpg
நீரற்ற மக்னீசியம் சல்பேட்டு
Magnesium sulfate.JPG
எப்சோமைட்டு (எப்டாஐதரேட்டு)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் சல்பேட்டு
வேறு பெயர்கள்
எப்சம் உப்பு (எப்டாஐதரேட்டு)
ஆங்கில உப்பு
கசப்பு உப்புகள்
குளியல் உப்புகள்
இனங்காட்டிகள்
7487-88-9 Yes check.svgY
14168-73-1 (மோனோஐதரேட்டு) Yes check.svgY
24378-31-2 (டெட்ராஐதரேட்டு) Yes check.svgY
15553-21-6 (பென்டாஐதரேட்டு) Yes check.svgY
13778-97-7 (எக்சாஐதரேட்டு) Yes check.svgY
10034-99-8 (எப்டாஐதரேட்டு) Yes check.svgY
ChEBI CHEBI:32599 Yes check.svgY
ChEMBL ChEMBL1200456 N
ChemSpider 22515 Yes check.svgY
DrugBank DB00653 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24083
வே.ந.வி.ப எண் OM4500000
UNII ML30MJ2U7I Yes check.svgY
பண்புகள்
MgSO4
வாய்ப்பாட்டு எடை 120.366 கி/மோல் (நீரிலி)
138.38 கி/மோல் (ஒற்றைஐதரேட்டு)
174.41 கி/மோல் (டிரைஐதரேட்டு)
210.44 கி/மோல் (பென்டாஐதரேட்டு)
228.46 கி/மோல் (எக்சாஐதரேட்டு)
246.47 கி/மோல் (எப்டாஐதரேட்டு)
தோற்றம் வெண்மை நிற படிகத் திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.66 கி/செ.மீ 3 (நீரிலி)
2.445 கி/செ.மீ 3 (ஒற்றைஐதரேட்டு)
1.68 கி/செ.மீ 3 (எப்டாஐதரேட்டு)
1.512 கி/செ.மீ3 (11-ஐதரேட்டு)
உருகுநிலை
நீரிலி
26.9 கி/100 மி.லி (0 °செ)
35.1 கி/100 மி.லி (20 °செ)
50.2 கி/100 மி.லி (100 °செ)
எப்டாஐதரேட்டு
71 கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன் 1.16 கி/100 மி.லி (18°செ, ஈதர்)
மதுசாரம், கிளிசராலில் ஓரளவு கரையும்
அசிட்டோனில் கரையாது.
−50•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.523 (ஒற்றைஐதரேட்டு)
1.433 (எப்டாஐதரேட்டு)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசாய்வு (ஐதரேட்டு)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் சல்பேட்டு
கால்சியம் சல்பேட்டு
இசுட்ரோன்சியம் சல்பேட்டு
பேரியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மக்னீசியம் சல்பேட்டு (Magnesium sulfate) என்பது MgSO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம உப்புச் சேர்மம்) ஆகும். இது எப்சம் உப்பு (Epsom salt) உன அழைக்கப்படக்கூடிய எப்டாஐதரேட்டு சல்பேட்டு கனிமமான எப்சோமைட்டு (MgSO4·7H2O) உடன் சேர்த்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதன் ஒற்றைஐதரேட்டான MgSO4·H2O கீசரைட்டு கனிமமாக காணப்படுகிறது. 1970களின் மத்தியில் இதன் ஒட்டுமொத்த உலக வருடாந்திர பயன்பாடு 2.3 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த உப்பு அதிகமாக வேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1] நீரற்ற மக்னீசியம் சல்பேட்டு ஒரு உலர்த்தும் காரணியாக பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற வடிவமானது காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணத்தால் இந்த வடிவத்தை துல்லியமாக எடையிடுவது கடினமாக உள்ளது. இந்த வடிவமானது, மருத்துவத் துறையில் கரைசல்களைத் தயாரிக்கப் பெரிதும் விரும்பப்படுகிறது. எப்சம் உப்பானது பாரம்பரியமாக குளியல் உப்பின் ஒரு பகுதிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்சம் உப்பினை ஒரு அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். மெய்வல்லுநர்கள் புண்பட்ட அல்லது வலியினால் பாதிக்கப்பட்ட தசைகளை தளர்த்திக் கொள்ள இதைப்  பயன்படுத்துகிறார்கள். தோட்டங்களில் பயிர்களை நன்கு வளர்க்க இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு இன்னும் பலவிதமான வழிகளில் பயன்படுகிறது. உதாரணமாக, எப்சம் உப்பு சிராய் துாளை நீக்குவதில் சிறப்பாக பயன்படுகிறது.[2]

இந்த உப்பு அடிப்படையான நலவாழ்வு அமைப்பில், முக்கியமாக தேவைப்படுகின்ற மருத்துவப்பொருளாக, உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் மாதிரிப் பட்டியலில் ஒன்றாக உள்ளது.[3]

பயன்கள்[தொகு]

மருத்துவம்[தொகு]

மக்னீசியம் சல்பேட்டானது, மருந்தியல் துறையில் (வெளிப்பயன்பாட்டிற்கான மற்றும் வாய்வழி பயன்பாட்டிற்கான) எப்சம் உப்பு எனப் பொதுவாக அழைக்கப்படக்கூடிய, மக்னீசியத்தை தயாரிக்க உதவும் ஒரு கனிமப் பொருளாக உள்ளது. மக்னீசியம் சல்பேட்டானது எளிதில் நீரில் கரையக்கூடியது. இதன் கரைதிறனானது, குழைமங்களில் (lotions) கொழுப்பு வகைப் பொருட்களுடன் இணைத்துப் பயன்படுத்தும் போது தடுக்கப்படுகிறது. குழைமங்கள், பொதுவாக நீர் மற்றும் எண்ணெயில் கரையக்கூடிய பகுதிப்பொருட்களை உள்ளடக்கிக் கொள்வதற்காக பால்மங்களையும், தொங்கல்களையும் அடிக்கடி பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, குழைமத்தில் உள்ள மக்னீசியம் சல்பேட்டு, தோலிற்கு இடம்பெயரவும், தோல் மூலம் உறிஞ்சப்படுவதற்கும் எளிதில் கிடைக்காமல் போகலாம். ஆகவே, இரண்டு வித ஆய்வுகளும் (நீர்க்கரைசலில் மக்னீசியம் சல்பேட்டு எதிர். பால்மம்/தொங்கலில் மக்னீசியம் சல்பேட்டு) உறிஞ்சும் தன்மை அல்லது உறிஞ்சும் தன்மையில் உள்ள குறைபாட்டை, ஒரு கடத்தியாக இதன் செயல்பாட்டைப் பற்றி முறையான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். இந்த உறிஞ்சும் திறனை பாதிக்கக்கூடிய காரணிகளாக வெப்பநிலை மற்றும் செறிவு போன்றவற்றில் உள்ள மாறுபாடுகள் கூட இருக்கலாம்.

எப்சம் உப்பு குளியல் உப்புக்களாகவும் மற்றும் பிரித்தெடுக்கும் தொட்டிகளிலும் பயன்படுகிறது. மக்னீசியம் சல்பேட்டு நரம்பின் வழியாக செலுத்தப்படும் மெக்னீசியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

உட்புறமாக செலுத்தும் மருந்துகள் தயாரிப்பில்:

 • வாய் மூலமாகக் கொடுக்கப்படக் கூடிய மக்னீசியம் சல்பேட்டு பொதுவான உவர்ப்பு மலமிளக்கியாகப் பயன்படுகிறது.
 • மக்னீசிய சத்துக்குறைபாட்டு (hypomagnesemia) நோய்க்கான இழப்பு நீக்க சிகிச்சையில் பயன்படுகிறது.[4]
 • மாரடைப்பின் போது ஏற்படும் இதய வெண்ட்ரிக்கிளின் இலயத்தில் ஏற்படும் அதிதீவிர முரணுக்கான (torsades de pointes) இலயப்பிழை எதிர்ப்புக்காரணியாகப் (antiarrhythmic agent) பயன்படுகிறது.[5]

அதிகப்படியான மக்னீசியம் ஐப்பர்மக்னீசீமியா (hypermagnesemia) உருவாகக் காரணமாக இருக்கலாம்.

வேளாண்மை[தொகு]

தோட்டத்தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகளில், மக்னீசியம் சல்பேட்டு மண்ணில் உள்ள மக்னீசியம் மற்றும் கந்தகப் பற்றாக்குறையை சரிசெய்யப் பயன்படுகிறது. மக்னீசியமானது பச்சையம் (chlorophyll) மூலக்கூறில் ஒரு அத்தியாவசியத் தனிமமாகும். மேலும், கந்தகமானது முக்கியமான ஒரு நுண்ணுாட்டச்சத்து ஆகும்.[6] பொதுவாக, அதிக அளவில் இது தொட்டிச்செடிகளுக்கும், மக்னீசியம் தேவைப்படும் தாவரங்களான உருளைக் கிழங்கு, உரோசா, தக்காளி, எலுமிச்சை, கேரட், மற்றும் குடை மிளகாய் போன்ற தாவர வகைகளுக்கும் பயன்படுகிறது. டாலமைட் போன்ற இதரவகை மண் பண்படுத்திகளை விட மக்னீசியம் சல்பேட்டானது அதனின் மிகுதியான கரைதிறன் காரணமாகவும், இலை வழி ஊட்டத்தை அனுமதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாகவும் சிறப்பான தேர்வாக உள்ளது. சுண்ணாம்புக்கல்லில் காணப்படும் காரவகை மக்னீசியம் உப்புக்களோடு ஒப்பிடும் போது மக்னீசியம் சல்பேட்டின் கரைசலானது நடுநிலைத் தன்மை உடையதாகவும் உள்ளது. ஆகையால், மண்ணிற்கான மக்னீசியம் மூலமாக மக்னீசியம் சல்பேட்டை பயன்படுத்துவது மண்ணின் pH மதிப்பை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதில்லை.[7] Physical-Properties}}</ref>

உணவு தயாரிப்பு[தொகு]

பியர் அல்லது பீர் எனப்படும் ஒரு வகை மதுபானத் தயாரிப்பில் புளிப்பேற்றும் உப்பாக மக்னீசியம் சல்பேட்டு பயன்படுகிறது. புளிப்பேற்றும் கரைசலில் உள்ள அயனிச்செறிவை சரி செய்யவும், மாவுப்பொருளின் மீதான நொதிகளின் செயலை அதிகப்படுத்தவும், பீர் மதுபானத்தில் விரும்பத்தக்க மணத்தை அதிகப்படுத்தவும் மக்னீசியம் சல்பேட்டு பயன்படுகிறது. சோயாத்தயிர் (tofu) தயாரிப்பில் உறைய வைக்கும் பொருளாகவும் (coagulant) மக்னீசியம் சல்பேட்டு பயன்படுகிறது.

வேதியியல்[தொகு]

பொதுவாக மக்னீசியம் சல்பேட்டு நீரிலியானது கரிமத் தொகுப்பு முறைகளில் இதனுடைய நீர் மீதான நாட்டத்தின் காரணமாக நீா் உறிஞ்சும் பொருளாகப் பயன்படுகிறது. வேதியியலில் ஒரு வேதிவினையின் விளைபொருளை பிரித்தெடுக்கவும், துாய்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படும் தொடர்செயல்முறைகளில், ஒரு கரிமப்பொருளின் நிலையானது, மக்னீசியம் சல்பேட்டின் நீரிலியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட தொகுதிகளாக உருவாகும் வரை பூரிதமடைகிறது. நீரேற்றப்பட்ட திண்மமானது வடிகட்டுதல் மற்றும் தெளிய வைத்து இறுத்தல் முறைப்படி நீக்கப்படுகிறது. சோடியம் சல்பேட்டு மற்றும் கால்சியம் சல்பேட்டு போன்ற இதர கனிம சல்பேட்டு உப்புகளும் இது போன்ற முறையில் பயன்படுத்தப்படலாம்.

கடல் சார் துறையில் பயன்[தொகு]

மக்னீசியம் சல்பேட்டு எப்டாஐதரேட்டு கடல் சார் மீன் காட்சியகங்களில் மக்னீசியத்தின் செறிவை நிர்வகிக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான கடல் சார் காட்சியகங்களில் அதிக அளவிலான பவழப்பாறைகள் சுண்ணமேற்றச் செயல்முறையின் (calcification process) காரணமாக மெது மெதுவாக அரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. மக்னீசியம் பற்றாக்குறையுள்ள உப்பு நீரில் உள்ள அயனிகளை நிலைக்கச் செய்ய மற்றும் தன்னிச்சையாக, கால்சியம் கார்பனேட்டாக வீழ்படிவாதலை தடுக்க, போதுமான அளவு மக்னீசியம் இல்லாமலிருந்தால், கடல் சார் காட்சியகங்களில் கால்சியம் மற்றும் காரத்தன்மை ஆகியவற்றின் செறிவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மிகவும் கடினமான செயலாகும்.[8]

இயற்பியல் பண்புகள்[தொகு]

மக்னீசியம் சல்பேட்டு நீரில் எளிதில் கரையக்கூடியது. மக்னீசியம் சல்பேட்டின் நீரிலியானது வலிமையான நீர் உறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ள காரணத்தால், ஈரமுறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. கடல் நீரில் ஒலியை உள்வாங்கிக்கொள்ள உதவும் முதன்மையான பொருளாக மக்னீசியம் சல்பேட்டு உள்ளது.[9] (ஒலி ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது). ஒலி உறிஞ்சப்படுதல் ஒலியின் அதிர்வெண்ணோடு வலிமையான தொடர்பைக் கொண்டுள்ளது. குறைவான அதிர்வெண் கொண்ட ஒலியலைகள் உப்பினால் குறைவாகவே உறிஞ்சப்படுகின்றன. ஆகவே பெருங்கடல்களில் ஒலியானது இன்னும் அதிக தொலைவுகளைக் கடக்கிறது. போரிக் அமிலமும் ஒலி உறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. ஆனால் கடல் நீரில் மிக அதிகமாகக் காணப்படும் உப்பான சோடியம் குளோரைடு, மிகவும் குறைவான ஒலி உறிஞ்சு திறனையேக் கொண்டுள்ளது.

ஐதரேட்டுகள்[தொகு]

மக்னீசியம் சல்பேட்டின் (MgSO4) ஏறத்தாழ அனைத்து கனிமவியல் வடிவங்களும் ஐதரேட்டுகளாகவே கிடைக்கின்றன. எப்சோமைட்டு “எப்சம் உப்பின்“ இயற்கையான ஒத்த பொருளாகும்.மற்றொரு எப்டாஐதரேட்டான தாமிரத்தைக்-கொண்டுள்ள கனிமமான அல்பெர்சைட்டு (Mg,Cu)SO4•7H2O,[10] சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இதுவரை அறியப்பட்டுள்ள மக்னீசியம் சல்பேட்டின் ஐதரேட்டுகளில், இரண்டுமே அதிக நீர் மூலக்கூறுகளைக் கொண்ட ஐதரேட்டுகள் இல்லை. ஏனெனில், சமீபத்தில் புவியிலிருந்து கண்டறியப்பட்டுள்ள கனிமமான மெரிடியானைட்டு, MgSO4•11H2O, அதிக எண்ணிக்கையிலான நீர் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தக் கனிமம் செவ்வாய் கோளிலும் கூட கிடைப்பதாக கூறப்படுகிறது. எக்சாஐதரேட்டு அடுத்த (6 நீா் மூலக்கூறுகளுடன் காணப்படும்) கீழ்நிலை ஐதரேட்டாகும். அடுத்த நிலையில் உள்ள மூன்று ஐதரேட்டுகள் — பென்டாஐதரேட்டு (5), இஸ்டார்கியைட்டு (4) மற்றும் சாண்டெரைட்டு (2) ஆகியவை ஆகும் — இவை மிகவும் அரிதாக காணப்படுபவை. கீசரைட்டு ஒரு மோனோஐதரேட்டு எளிதில் ஆவியாகக்கூடிய படிவுகளில் காணப்படும் பொதுவான வடிவம் ஆகும். நீரற்ற மக்னீசியம் சல்பேட்டானது சில எரியக்கூடிய நிலக்கரிச்சுரங்கங்களிலிருந்து கிடைப்பதாகவும், ஆனால் அவை ஒருபோதும் கனிமங்களா கருதப்படுவதில்லை எனவும் தெரிகிறது. ஐதரேட்டுகளின் pH மதிப்பானது சராசரியாக 6.0 (5.5 to 6.5) ஆக இருக்கிறது. மக்னீசயம் ஐதரேட்டுகள் படிக நீரைக் (water of crystallisation) கொண்டுள்ளது.[11] திட்ட வெப்ப அழுத்த நிலை யில், ஈரப்பதம் குறைவாக போதுமான அளவிற்கு குறைவாக இருக்கும்போது, எப்டாஐதரேட்டானது ஒரு நீர் மூலக்கூறை இழந்து எக்சாஐதரேட்டை உருவாக்கலாம். தோரயமாக 150 °C வெப்பநிலையில் எக்சாஐதரேட்டை வெப்பப்படுத்தும் பொழுது ஒற்றைஐதரேட்டானது உருவாகிறது. தோராயமாக 200 °C வெப்பநிலையில் ஒற்றைஐதரேட்டை வெப்பப்படுத்தும் போது நீரற்ற மக்னீசியம் சல்பேட்டைத் தயாரிக்கலாம். இந்த வெப்பநிலைக்கு மேலும் தொடர்ந்து வெப்பப்படுத்தினால் நீரற்ற உப்பானது சிதைவடைந்து மக்னீசியம் ஆக்சைடு (MgO) மற்றும் கந்தக ட்ரை ஆக்சைடு (SO3) ஆகியவற்றைத் தருகிறது. இருந்தபோதிலும், இந்த வெப்பநிலையில் கந்தக ட்ரை ஆக்சைடு (SO3) மெதுவாக சிதைவடைந்து கந்தக டை ஆக்சைடு (SO2) மற்றும் ஆக்சிஜன் (O2) ஆகியவற்றைத் தருகிறது. கருத்தியலாக 1000°செ அளவில் தான் மக்னீசியம் ஆக்சைடானது சிதைவுறும் எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நடைமுறையில் 250 °செ அளவிலான, குறைவான வெப்பநிலையில் கூட சிதைவுறுதல் நடைபெறுகிறது. இதிலிருந்து இத்தகைய உப்புக்களை உலர்த்த முயலும் போது 200° செ வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் அதற்கு மேலான வெப்பநிலைகளில் வெப்பப்படுத்தும் போது கந்தக டை ஆக்சைடு மற்றும் கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற ஆபத்தான வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உள்ளது என்பது அறிவுறுத்தப்படுகிறது.

உற்பத்தி[தொகு]

எப்டாஐதரேட்டானது கந்தக அமிலத்துடன் மக்னீசியம் கார்பனேட்டு அல்லது ஆக்சைடை நடுநிலையாக்கல் வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இது வழக்கமாக இயற்கை மூலங்களிலிருந்து நேரடியாகப் பெறப்படுகிறது. மக்னீசியம் சல்பேட்டின் நீரிலி வடிவமானது ஐதரேட்டுகளை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தியே தயாரிக்கப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

இந்த உப்பானது, சல்பேட்டின் கனிமமான எப்டாஐதரேட்டு எப்சோமைட்டுடன் (MgSO4•7H2O), சேர்த்து அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த உப்பானது, இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே எனுமிடத்தில் உள்ள எப்சம் எனக்கூடிய கசப்பான உப்பு நீரூற்றிலிருந்து தயாரிக்கப்பட்டதன் காரணமாக எப்சம் உப்பு எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Industrial Inorganic Chemistry, Karl Heinz Büchel, Hans-Heinrich Moretto, Dietmar Werner, John Wiley & Sons, 2d edition, 2000, ISBN 978-3-527-61333-5
 2. "Quick Cures/Quack Cures: Is Epsom Worth Its Salt?". Wall Street Journal. 9-04-2012. 12-04-2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி); Check date values in: |date=, |archivedate= (உதவி)
 3. "WHO Model List of Essential Medicines" (PDF). World Health Organization. April 2015. 14-12-2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 4. "Pharmaceutical Information – Magnesium Sulfate". RxMed. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.
 5. "CPR and First Aid: Antiarrhythmic Drugs During and Immediately After Cardiac Arrest (section)". American Heart Association. 29-08-2016 அன்று பார்க்கப்பட்டது. Previous ACLS guidelines addressed the use of magnesium in cardiac arrest with polymorphic ventricular tachycardia (ie, torsades de pointes) or suspected hypomagnesemia, and this has not been reevaluated in the 2015 Guidelines Update. These previous guidelines recommended defibrillation for termination of polymorphic VT (ie, torsades de pointes), followed by consideration of intravenous magnesium sulfate when secondary to a long QT interval. Check date values in: |accessdate= (உதவி)
 6. Reece, J. B., & Campbell, N. A. (2011). Campbell biology. (9th ed., p. 791). Boston: Benjamin Cummings
 7. "Pubchem: magnesium sulfate".
 8. "Do-It-Yourself Magnesium Supplements for the Reef Aquarium". Reefkeeping. 2006. 2008-03-14 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Underlying physics and mechanisms for the absorption of sound in seawater". Resource.npl.co.uk. 2009-07-06 அன்று பார்க்கப்பட்டது.
 10. Peterson, Ronald C.; Hammarstrom, Jane M.; Seal, II, Robert R (Feb 2006). "Alpersite (Mg,Cu)SO4•7H2O, a new mineral of the melanterite group, and cuprian pentahydrite: Their occurrence within mine waste". American Mineralogist 91 (2–3): 261–269. doi:10.2138/am.2006.1911. 
 11. Lucia Odochian "Study of the nature of the crystallization water in some magnesium hydrates by thermal methods," பரணிடப்பட்டது 2011-08-26 at the வந்தவழி இயந்திரம் J. of Thermal Analysis and Calorimetry, Volume 45, Number 6, December, 1995. எஆசு:10.1007/BF02547437

புற இணைப்புகள்[தொகு]