மக்னீசியம் பைகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் பைகார்பனேட்டு
Magnesium bicarbonate
மக்னீசியம் பைகார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் ஐதரசன் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
மக்னீசியம் பைகார்பனேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 92335 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102204
SMILES
  • [Mg++].OC([O-])=O.OC([O-])=O
பண்புகள்
Mg(HCO3)2
வாய்ப்பாட்டு எடை 146.34 கி/மோல்
0.077 கி / (100 மி.லி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் பைகார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மக்னீசியம் பைகார்பனேட்டு (Magnesium bicarbonate) என்பது Mg(HCO3)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் ஐதரசன்கார்பனேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் மக்னீசியத்தின் பைகார்பனேட்டு வகை உப்பாகும். மக்னீசியம் ஐதராக்சைடும் (மக்னீசியம் பால்) நீர்த்த கார்போனிக் அமிலமும் (சோடா நீர்) வினைபுரிந்து மக்னீசியம் பைகார்பனேட்டு உருவாகிறது. மக்னீசியம் பைகார்பனேட்டு நீர்த்த கரைசலாகவே காணப்படுகிறது. இதனை உற்பத்தி செய்வதற்கு மக்னீசியம் ஐதராக்சைடின் தொங்கல் கரைசலை அழுத்த கார்பனீராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் மக்னீசியம் பைகார்பனேட்டு கரைசல் உருவாகிறது :[1]

Mg(OH)2 + 2 CO2 → Mg(HCO3)2.

இதன் விளைவாக விளையும் கரைசலை உலர்த்துவதால் மெக்னீசியம் பைகார்பனேட் சிதைவடைந்து மெக்னீசியம் கார்பனேட்டும் கார்பன் டை ஆக்சைடும், நீரும் விளைகின்றன.

Mg2+ + 2 HCO3 → MgCO3 + CO2 + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. Margarete Seeger; Walter Otto; Wilhelm Flick; Friedrich Bickelhaupt; Otto S. Akkerman (2005), "Magnesium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a15_595.pub2