அலுமினியம் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் கார்பனேட்டு
Uhličitan hlinitý.PNG
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம் கார்பனேட்டு
இனங்காட்டிகள்
14455-29-9 Yes check.svgY
ChemSpider 10606614 Yes check.svgY
பண்புகள்
C3Al2O9
வாய்ப்பாட்டு எடை 233.99 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அலுமினியம் கார்பனேட்டு (Aluminium carbonate )' என்பது Al2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மத்தின் பண்புகள் முழுமையாக வரையறை செய்யப்படவில்லை. அலுமினியம், காலியம் மற்றும் இண்டியம் போன்ற தனிமங்களின் எளிய கார்பனேட்டுகளும் அறியப்படவிலை என்ற கருத்தும் நிலவுகிறது[1]. அடிப்படை அலுமினியம் கார்பனேட்டாக அறியப்பட்டிருப்பது டாவ்சோனைட்டு என்ற கனிமம் மட்டுமேயாகும்.

இரட்டைச் சிதைவு வினைகளில் அலுமினியம் கார்பனேட்டு உருவாகின்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. கரையும் கார்பனேட்டுகள் போதுமான அளவுக்கு காரத்தன்மையுடன் அலுமினியம் ஐதராக்சைடை வீழ்படிவாக்கவும் கார்பன் டையாக்சைடை வெளியிடவும் செய்கிறது[2]. அலுமினியம் சல்பேட்டு மற்றும் சோடியம் பைகார்பனேட்டு இரண்டும் சேர்ந்து வினைபுரிந்து கார்பன் டையாக்சைடும் அலுமினியம் ஐதராக்சைடும் உற்பத்தி செய்கின்றன. இவையிரண்டும் நுரை உற்பத்தியை நிலைப்படுத்துகின்றன[2]. இவ்வினையின் அடிப்படையே தொடக்கக்கால தீ அணைக்கும் கருவிகளின் அடிப்படையாக இருந்தது. இதை 1904 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் உலோரன் கண்டறிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]