அலுமினியம் பன்னிருபோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் பன்னிருபோரைடு
| |
வேறு பெயர்கள்
அலுமினியம் போரைடு
| |
இனங்காட்டிகள் | |
12041-54-2 | |
EC number | 234-924-2 |
பண்புகள் | |
AlB12 | |
வாய்ப்பாட்டு எடை | 156.714 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத்திலிருந்து கருப்பாகும் திடப்பொருள் |
அடர்த்தி | 2.56 கி/செமீ3 |
உருகுநிலை | 2,200 °C (3,990 °F; 2,470 K) |
கரையாதது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோண (α-வகை) நேர்ச்சாய்சதுர (β-வகை) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் பன்னிருபோரைடு (Aluminium dodecaboride, AlB12) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஓர் உலோகமான அலுமினியமும் ஓர் அலோகமான போரானும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மற்றும் போரான் சேர்ந்து உருவாகக்கூடிய இரண்டு சேர்மங்களில் ஒன்று அலுமினியம் பன்னிருபோரைடு ஆகும். மற்றொரு சேர்மம் AlB2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட அலுமினிய மிருபோரைடு ஆகும்.
பண்புகள்
[தொகு]அலுமினியம் பன்னிருபோரைடு இரண்டு விதமான படிக வடிவங்களில் காணப்படுகின்றது. அவை α-AlB12, மற்றும் γ-AlB12 என்பனவாகும். இரண்டு வடிவங்களும் ஒரே மாதிரியான முப்பரிமாண B12 மற்றும் B20 அலகுகள் கொண்ட கட்டமைப்பைப் பெற்றுள்ளன.[1] தற்பொழுது இவை தவிர மூன்றாம் நிலை படிக வடிவமான β-AlB12 இருப்பதாக நம்பப்படுகிறது. மும்மை போரைடு என்றழைக்கப்படும் இதனுடைய மூலக்கூறு வாய்பாடு 2Al3B48 ஆகும்.[2]
தயாரிப்பு
[தொகு]போரான்(III) ஆக்சைடுடன் கந்தகம் மற்றும் அலுமினியம் சேர்த்து வினைப்படுத்திய பின்னர் கிடைக்கும் கலவையுடன் கரிமம் சேர்த்து β-வடிவ போரைடை தயாரிக்க முடியும்.
பயன்கள்
[தொகு]AlB12 வைரம் அல்லது குருந்தத்திற்குப் பதிலாக தேய்க்கும் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Crystal chemistry of α-AlB12 and γ-AlB12., Higashi, Iwami; Journal of solid state chemistry 2000, vol. 154, no 1, 168-176,எஆசு:10.1006/jssc.2000.8831
- ↑ Phases and twinning in C2Al3B48 (β-AlB12), Matkovich V. I. , Giese R. F. ; Economy J. Z. Krist. 122, 108-15. (1965)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Boron" பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம்;
- "Lightness and hardness"