அலுமினியம் மாலிப்டேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
15123-80-5 = | |
ChemSpider | 10732777 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Al2(MoO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 533.77 கி மோல்−1 |
தோற்றம் | சாம்பல் நிற உலோகத் திண்மம்/தூள் நெடியற்றது |
உருகுநிலை | 705 °C (1,301 °F; 978 K) |
நீரில் சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் மாலிப்டேட்டு (Aluminium molybdate) என்பது Al2(MoO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் அலுமினியம் மாலிப்டேட்டின் படிக அமைப்பை நியூட்ரான் அலைவளைவு தரவுகளில் இருந்து கண்டறிந்து தெளிவு பெறலாம். அணு கட்டமைப்பு காணப்பட வேண்டிய பொருளின் தூளை குறிப்பிட்ட நேரத்திற்கு வெப்ப அல்லது குளிர் நியூட்ரான் கற்றையின் பாதையில் தூவுதல் அல்லது பறக்கச் செய்தல் மூலம் அலைவளைவு தரவுகளைப் பெறுகிறார்கள். இத்தரவுகள் மூலம் கட்டமைப்பு உறுதி செய்யப்படுகிறது. ஏ=15.3803(9)Å, பி= 9.0443(1) Å, சி= 17.888(1) Å, β = 125.382(3)° மற்றும் பீ21/ஏ என்ற இடக்குழுத் தரவுகளுடன் அலுமினியம் மாலிப்டேட்டு ஒற்றைச்சரிவுமுறையில் படிகமாகியுள்ளது, பெர்ரிக் மாலிப்டேட்டு மற்றும் குரோமியம் மாலிப்டேட்டுகளின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பை அலுமினியம் மாலிடேட்டும் கொண்டுள்ளது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harrison, W. T. A.; Cheetham, A. K.; Faber, J. (1988). "The crystal structure of aluminum molybdate". Journal of Solid State Chemistry 76 (2): 328–333. doi:10.1016/0022-4596(88)90226-5. Bibcode: 1988JSSCh..76..328H.
புற இணைப்புகள்
[தொகு]- Aluminum Molybdate MSDS பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம்