அலுமினியம் அசிட்டேட்டு
அலுமினியம் அசிட்டேட்டு அல்லது அலுமினியம் எத்தனோயேட்டு (Aluminium acetate or aluminium ethanoate) என்பது அசிட்டிக் அமிலத்தினுடைய அலுமினிய உப்பாகும்[1]. இவ்வுப்பு சிலவேளைகளில் AlAc[2] என்று சுருக்க வடிவிலும் குறிக்கப்படுகிறது. ஆனால் அலுமினியம் அசிட்டேட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு C6H9AlO6 ஆகும். திண்மநிலையில் இப்பெயரில் மூன்று உப்புகள் அறியப்படுகின்றன. கார அலுமினியம் ஓரசிட்டேட்டு ((HO)2AlCH3CO2), கார அலுமினியம் ஈரசிட்டேட்டு (HOAl(CH3CO2)2) மற்றும் நடுநிலை அலுமினியம் மூவசிட்டேட்டு (Al(CH3CO2)3.).[3] நீர்த்த நிலையில் அலுமினியம் மூவசிட்டேட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு மற்ற இரண்டு அசிட்டேட்டுகளையும் கொடுக்கிறது. இம்மூன்று அசிட்டேட்டுகளின் கரைசல்கள் அனைத்தையும் சேர்த்து அலுமினியம் அசிட்டேட்டு என்று பொதுவாக குறிக்கப்படுகிறது.
அலுமினியம் ஓரசிட்டேட்டு
[தொகு]அலுமினியம் ஓரசிட்டேட்டு என்பது Al(OH)2(CH3COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் ஐதராக்சைடும் நீர்த்த அசிட்டிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. அடர் அசிட்டிக் அமிலம் பயன்படுத்தப்பட்டால் ஈரசிட்டேட்டும் மூவசிட்டேட்டும் உருவாகின்றன.[4]
அலுமினியம் ஈரசிட்டேட்டு
[தொகு]அலுமினியம் ஈரசிட்டேட்டு என்பது கார அலுமினியம் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நீரிய அலுமினியம் அசிட்டேட்டு கரைசலிலிருந்து வெள்ளை நிறத் தூளாக இது தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மூவசிட்டேட்டை நீருடன் சேர்த்து நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[5]
அலுமினியம் மூவசிட்டேட்டு
[தொகு]அலுமினியம் மூவசிட்டேட்டை அலுமினியம் குளோரைடு அல்லது அலுமினியத் தூளுடன் அசிட்டிக் அமிலம் மற்றும் அசிட்டிக் நீரிலி கலவையைச் சேர்த்து வினைப்படுத்தி தயாரிக்கலாம்.[6] இதையே சாதரணமாக அலுமினியம் அசிட்டேட்டு உப்பு என்கிறார்கள். 180 பாகை செல்சியசு என்ற உயர் வெப்பநிலையில் நீரற்ற சூழலில் இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A Dictionary of Chemistry (6 ed.), ed. John Daintith, Oxford University Press 2008, ISBN 9780199204632
- ↑ Example of use of abbreviation AlAc in Geochemistry of Crustal Processes to High Temperatures and Pressures, D. J. Wesolowski, J. G. Blencoe, D. R. Cole, p36
- ↑ Perry, Dale L.; Phillips, Sidney L., eds. (1995). Handbook of Inorganic Compounds. CRC Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718.
- ↑ Wade, K. (1973). The Chemistry of Aluminium, Gallium, Indium and Thallium : Comprehensive Inorganic Chemistry. Banister, A. J., Bailar, J. C., Emeléus, H. J., Nyholm, Ronald. Saint Louis: Elsevier Science. p. 1047. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5322-3. இணையக் கணினி நூலக மைய எண் 953379198.
- ↑ 5.0 5.1 Daintith, John, ed. (2008). "Aluminium ethanoate (aluminium acetate)". A Dictionary of Chemistry (6th ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199204632.
- ↑ Downs, A. J. (1993). Chemistry of Aluminium, Gallium, Indium, and Thallium. Bishopbriggs, Glasgow: Chapman & Hall. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 075140103X.