உள்ளடக்கத்துக்குச் செல்

அலுமினியம் இருபோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் இருபோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் இருபோரைடு
வேறு பெயர்கள்
அலுமினியம் போரைடு
அலுமினியம் இருபோரைடு
இனங்காட்டிகள்
12041-50-8 Y
ChemSpider 21171253 Y
EC number 234-923-7
InChI
  • InChI=1S/Al.B2/c;1-2/q-2;+2 Y
    Key: XGNZNBRDPPLKTC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Al.B2/c;1-2/q-2;+2/rAlB2/c1-2-3-1
    Key: XGNZNBRDPPLKTC-DOGMWQOPAK
யேமல் -3D படிமங்கள் Image
  • B1=B[Al]1
பண்புகள்
AlB2
வாய்ப்பாட்டு எடை 48.604 கி/மோல்
தோற்றம் செப்பு-சிவப்புத் திண்மம்
அடர்த்தி 3.19 கி/செமீ³
உருகுநிலை 1,655 °C (3,011 °F; 1,928 K)
கரையாதது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP3
புறவெளித் தொகுதி P6/mmm, No. 191
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-151 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
34.7 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 43.6 யூல்/மோல் கெல்வின்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

அலுமினியம் இருபோரைடு அல்லது அலுமினியம் டைபோரைடு (Aluminium diboride) என்ற வேதிச் சேர்மம் அலுமினியத்துடன் உலோகப்போலியான போரான் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அலுமினியமும் போரானும் இணைந்து உருவாகும் இரண்டு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு (AlB2) ஆகும். அலுமினியம் பன்னிருபோரைடு (AlB12) என்பது மற்றொரு சேர்மமாகும். இவ்விரு சேர்மங்களும் பொதுவாக அலுமினியம் போரைடு என்று அழைக்கப்படுகின்றன.

அமைப்புரீதியாக, போரான் அணுக்கள் அலுமினியம் அணுக்களை இடையில் கொண்டிருக்கும் கடுங்கரித் தகடுகளாக உருவாகிறது. இது மக்னீசியம் இருபோரைடின் அமைப்பை மிகவும் ஒத்துள்ளது. ஒற்றை அலுமினியம் இருபோரைடு படிகங்கள் அடிப்படை அறுங்கோண தளத்தின் அச்சுக்கு இணையாக உலோக கடத்திகளாக திகழ்கின்றன.[1]

அமிலங்கள் மற்றும் ஐதரசன் வாயுவுடன் வினைபுரிகையில் நச்சு வாயுக்களை உற்பத்தி செய்வதால் அலுமினியம் போரைடு ஒரு அபாயகரமான பொருளாகக் கருதப்படுகிறது. உதாரணமாக இது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து போரேன் மற்றும் அலுமினியம் குளோரைடை வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "On the electronic and structural properties of aluminum diboride Al0.9B2" Burkhardt, Ulrich; Gurin, Vladimir; Haarmann, Frank; Borrmann, Horst; Schnelle, Walter; Yaresko, Alexander; Grin, Yuri Journal of Solid State Chemistry 177 (2004) 389-394

வெளி இனைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_இருபோரைடு&oldid=4309927" இலிருந்து மீள்விக்கப்பட்டது