உள்ளடக்கத்துக்குச் செல்

அலுமினியம் சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் சயனைடு
இனங்காட்டிகள்
87993-97-3 Y
ChemSpider 19984794
InChI
  • InChI=1S/3CN.Al/c3*1-2;/q3*-1;+3
    Key: BIABJQLRIVAXSJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21122287
  • [C-]#N.[C-]#N.[C-]#N.[Al+3]
பண்புகள்
C3AlN3
வாய்ப்பாட்டு எடை 105.04 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அலுமினியம் சயனைடு (Aluminium cyanide) Al(CN)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சயனைடாக வகைப்படுத்தப்படும் இது வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. அலுமினியம் சயனைடு நீராற்பகுப்புக்கு உட்படும்போது அலுமினியம் ஐதராக்சைடையும் ஐதரசன் சயனைடையும் கொடுக்கிறது. [2]

தயாரிப்பு

[தொகு]

அலுமினியம் சயனைடு முதன்முதலில் 1924 ஆம் ஆண்டில் அதன் அம்மோனியேட்டாக Al(CN)3·5NH3 தயாரிக்கப்பட்டது. இதற்காக அலுமினியம் உலோகத்துடன் பாதரசம்(II) சயனைடு ஆகியவை வினைபுரியச் செய்யப்பட்டன. நீராற்பகுப்பை தடுப்பதற்காக வினை கலவையுடன் திரவ அம்மோனியாவும் சேர்க்கப்பட்டது.[1]

2 Al + 3 Hg(CN)2 → 2 Al(CN)3 + 3 Hg

அம்மோனியேட்டு தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அலுமினியம் ஐதராக்சைடு, அம்மோனியா மற்றும் அம்மோனியம் சயனைடு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.[1]

தூய அலுமினியம் சயனைடு 2001 ஆம் ஆண்டில் இலித்தியம் டெட்ராகுளோரோஅலுமினேட்டுடன் டை எத்தில் ஈதரில் உள்ள மும்மெத்தில்சிலில் சயனைடை சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது. இதன் படிகங்கள் எண்முக புருசியன்-நீல-வகை கட்டமைப்பில் உருவாகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bergstrom, F. W. (July 1924). "The Reaction Between Mercuric Cyanide and Certain Metals in Liquid Ammonia". Journal of the American Chemical Society 46 (7): 1559–1568. doi:10.1021/ja01672a002. 
  2. Axel Schulz; Jonas Surkau (2022). "Main group cyanides: from hydrogen cyanide to cyanido-complexes" (in en). Reviews in Inorganic Chemistry 43 (1): 49-188. doi:10.1515/revic-2021-0044. 
  3. Darrick Williams; Brett Pleune; Kurt Leinenweber; J. Kouvetakis (2001). "Synthesis and Structural Properties of the Binary Framework C–N Compounds of Be, Mg, Al, and Tl" (in en). Journal of Solid State Chemistry 159 (1): 244-250. doi:10.1006/jssc.2001.9192. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_சயனைடு&oldid=3755824" இலிருந்து மீள்விக்கப்பட்டது