அலுமினியம் சிட்ரேட்டு
அலுமினியம் சிட்ரேட்டு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
31142-56-0 | |
ChemSpider | 82709 |
EC number | 250-484-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 91599 |
| |
UNII | IJ623779BA |
பண்புகள் | |
AlC 6H 5O 7 | |
வாய்ப்பாட்டு எடை | 216.08 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
கரையாது | |
மருந்தியல் | |
கழிப்பு | சிறுநீரகம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H373 | |
P260, P264, P270, P280, P301+312, P302+352, P305+351+338, P314, P321, P330, P332+313, P337+313, P362, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அலுமினியம் அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் சிட்ரேட்டு (Aluminium citrate) AlC6H5O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் குளோரைடு அறுநீரேற்றுடன் சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் வெண்மையான இப்படிக உப்பு உருவாகிறது.[1]
பயன்கள்
[தொகு]அலுமினியம் சிட்ரேட்டை எண்ணெய் தொழிற் துறையில் பல பலபடிகளுக்கு குறுக்கு இணைப்பாகப் பயன்படுத்தலாம்.[2] வியர்வை எதிர்ப்பு மருந்தாகவும் இது பயன்படுகிறது.
விளைவுகள்
[தொகு]கால்சியம் சிட்ரேட்டு (Ca2+) அயனியை இடப்பெயர்ச்சி செய்யும் Al3+ அயனிகளின் திறனின் காரணமாக அலுமினியம் சிட்ரேட்டு இரத்தத்தில் சுமார் 8% அலுமினியத்தை எடுத்துக்கொள்கிறது.[3] இதனால் சிறுநீரகங்களில் பாசுபரசின் அதிகரிப்பு ஏற்படுவதால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.[4] அல்சைமர் நோயை உண்டாக்கும் என சந்தேகிக்கப்படுகிறது என்றாலும் கூடுதல் சான்றுகள் தேவை காரணமாக உறுதிப்படவில்லை.[5] சிலிகோசிசு நோயை தடுப்பது போன்ற சில நேர்மறையான விளைவுகளையும் மனிதர்களுக்கு இது அளிக்கிறது. ஒருவேளை இதை உட்கொண்டால், 80% சேர்மம் சிறுநீர் மூலம் உடல் வழியாக வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ளவையும் மெதுவாக வெளியேறும்.[6]
அலுமினியம் சிட்ரேட்டு அணைவுகள்
[தொகு]அம்மோனியம் அலுமினியம் சிட்ரேட்டு ((NH4)4Al3C6H4O7(OH)(H2O)) போன்ற அணைவுச் சேர்மங்களை அலுமினியம் சிட்ரேட்டு உருவாக்கும். அலுமினியம் நைட்ரேட்டு நோனா நீரேற்று, சிட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடு ஆகியவற்றைக் கலந்து இதை உருவாக்கலாம்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fraga, A.K.; Oliveira, P.F.; Dores, F.G.L. (2020). "Synthesis and characterization of aluminium citrate compounds and evaluation of their influence on the formation of hydrogels based on polyacrylamide" (in English). Iranian Polymer Journal 29 (8): 649–657. doi:10.1007/s13726-020-00825-5.
- ↑ Johannes Fink (2003). Oil Field Chemicals. Gulf Professional Publishing. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-049757-8.
- ↑ R.A.Yokel (2013). "Aluminum". Encyclopedia of Human Nutrition (Third Edition) (University of Kentucky, Lexington, KY, USA): 57–63. doi:10.1016/B978-0-12-375083-9.00008-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123848857.
- ↑ A.J. Downs (1993). Downs, A.J. (ed.). Chemistry of Aluminium, Gallium, Indium and Thallium (in English). Springer Netherlands. p. 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780751401035.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ KennethAbreo (2001). "Chapter 2 - Aluminum-Induced Bone Disease: Implications for Alzheimer's Disease" (in English). Aluminium and Alzheimer's Disease (Springer link) 2. doi:10.1016/B978-044450811-9/50027-6.
- ↑ Kui Wang (1989). Silica Induced Cell Damage and the Protective Effect of Aluminum Cimplexes (in English). Institute of Advanced Studies, University of Malaya.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Timothy L. Feng; Patrick L. Gurian; Matthew D. Healy; Andrew R. Barron (1990). "Aluminum citrate: isolation and structural characterization of a stable trinuclear complex" (in English). Inorg. Chem. 29 (3): 408–441. doi:10.1021/ic00328a013.