பொலோனியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொலோனியம் அறுபுளோரைடு
இனங்காட்டிகள்
35473-38-2
பண்புகள்
PoF6
வாய்ப்பாட்டு எடை 322.97 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் அறுபுளோரைடு (Polonium hexafluoride) என்பது PoF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அறியப்பட்டுள்ள 17 இரட்டை அறுபுளோரைடுகளில் இந்த அறுபுளோரைடும் ஒன்றாகும்[1].

தயாரிப்பு[தொகு]

1945 ஆம் ஆண்டில் பொலோனியம் அறுபுளோரைடை பின் காணும் வினையின் மூலம் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

210Po + 3 F2 → 210PoF6

ஆனால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. இச்சேர்மத்தின் கொதிநிலை கிட்டத்தட்ட -40 பாகை செல்சியசாக இருக்குமென்று முன்கணிக்கப்பட்டது[2]. 208PoF6 வெற்றிகரமாக இதே வினையினால் 1960 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது. மேலும் சில நிலையான ஐசோடோப்புகள்208Po,[1]:594 உருவாக்கப்பட்டன. இங்கு எளிதில் ஆவியாகக்கூடிய பொலோனியம் புளோரைடு உருவானது. ஆனால் இது முற்றிலுமாக வரையறுக்கப்படவில்லை. விரைவாக இது கதிவீச்சுப் பகுப்பிற்கு உட்பட்டு பொலோனியம் நான்குபுளோரைடாகச் சிதைவடைகிறது. [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, ISBN 0-12-352651-5
  2. Summary of work to date on volatile neutron source, Monsanto Chemical Company, Unit 3 abstracts of progress reports, August 16–31, 1945; Abstract; PDF.
  3. Weinstock, B., Chernick, C.L.: The preparation of a volatile polonium fluoride. J. Am. Chem. Soc. 82, 4116–4117 (1960)
  4. https://books.google.com.ru/books?id=8qePsa3V8GQC&pg=PA214&lpg=PA214&dq=polonium+difluoride&source=bl&ots=5aalmjMNj4&sig=_veRLpEhqDygn6tZzqzKcgKAMnw&hl=en&sa=X&ved=0ahUKEwiknpXj4-_NAhXENo8KHbnmA6kQ6AEIOTAF#v=onepage&q=polonium%20difluoride&f=false