பொலோனியம் டெட்ரா அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் டெட்ரா அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொலோனியம்(IV) அயோடைடு, பொலோனியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
61716-27-6
InChI
  • InChI=1S/4HI.Po/h4*1H;/p-4
    Key: DHKHYWWHNZXEQM-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101946440
SMILES
  • [I-].[I-].[I-].[I-].[Po]
பண்புகள்
PoI
4
[1]
வாய்ப்பாட்டு எடை 716.6 கி/மோல்
தோற்றம் Black crystals
உருகுநிலை 200 °C (392 °F; 473 K)
கரையாது[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் டெட்ரா அயோடைடு (Polonium tetraiodide) PoI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் அயோடினும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு எளிதில் ஆவியாகும்.

தயாரிப்பு[தொகு]

1. பொலோனியம் உலோகத்தின் மீது அயோடின் ஆவியைச் செலுத்தி வினைபுரியச் செய்து பொலோனியம் டெட்ரா அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

2. பொலோனியம் ஈராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்தாலும் பொலோனியம் டெட்ரா அயோடைடு கிடைக்கிறது:[3]

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் டெட்ரா அயோடைடு தண்ணீரில் கரையாது.

வேதிப்பண்புகள்[தொகு]

ஐதரோ அயோடிக் அமிலத்துடன் பொலோனியம் டெட்ரா அயோடைடு வினையில் ஈடுபட்டு அறு அயோடோ பொலோனிக் அமிலம் உருவாகிறது.

வெப்பப்படுத்தினால் பொலோனியம் டெட்ரா அயோடைடு சிதைவடைகிறது.

ஐதரசன் சல்பைடுடன் பொலோனியம் டெட்ரா அயோடைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொலோனியம் உலோகம் உருவாகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3510. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://www.google.ru/books/edition/Dictionary_of_Inorganic_Compounds/9eJvoNCSCRMC?hl=en&gbpv=1&dq=Polonium+tetraiodide&pg=PA3510&printsec=frontcover. பார்த்த நாள்: 2 November 2021. 
  2. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-539335-4. https://www.google.ru/books/edition/The_Aqueous_Chemistry_of_the_Elements/-oI8DwAAQBAJ?hl=en&gbpv=1&dq=Polonium(IV)+iodide+PoI4&pg=PA243&printsec=frontcover. பார்த்த நாள்: 2 November 2021. 
  3. M. Schmidt, W. Siebert, K. W. Bagnall (2013). The Chemistry of Sulphur, Selenium, Tellurium and Polonium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 961–962. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1483158655. 
  4. K. W. Bagnall, R. W. M. D'Eye, J. H. Freeman (1956). "657. The polonium halides. Part III. Polonium tetraiodide". Journal of the Chemical Society (Resumed) (J. Chem. Soc.): 3385–3389. doi:10.1039/JR9560003385.