தாமிர(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர (II) புரோமைடு
Copper (II) bromide
Kristallstruktur Cadmiumiodid.png
தாமிர(II) புரோமைடின்படிகக் கட்டமைப்பு
(சாம்பல் நிறத்தில் தாமிர அணுக்கள்,இளஞ்சிவப்பில் புரோமின்)
பெயர்கள்
வேறு பெயர்கள்
குப்ரிக் புரோமைடு
தாமிர டைபுரோமைடு
இனங்காட்டிகள்
7789-45-9 Yes check.svgY
ChemSpider 8395631 Yes check.svgY
InChI
 • InChI=1S/2BrH.Cu/h2*1H;/q;;+2/p-2 Yes check.svgY
  Key: QTMDXZNDVAMKGV-UHFFFAOYSA-L Yes check.svgY
 • InChI=1/2BrH.Cu/h2*1H;/q;;+2/p-2
  Key: QTMDXZNDVAMKGV-NUQVWONBAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24611
SMILES
 • [Cu+2].[Br-].[Br-]
பண்புகள்
CuBr2
வாய்ப்பாட்டு எடை 223.37 கி/மோல்
தோற்றம் சாம்பல் கருப்பு படிகங்கள்
ஈரமுறிஞ்சி
அடர்த்தி 4.710 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 498 °C (928 °F; 771 K)
கொதிநிலை 900 °C (1,650 °F; 1,170 K)
55.7 கி/100 மி.லி (20 °செல்சியசு)
[[ஆல்ககால், அசிட்டோன், அமோனியா]]-இல் கரைதிறன் கரையும்
[[பென்சீன், ஈதர், எத்தில் ஈதர், கந்தக அமிலம்]]-இல் கரைதிறன் கரையாது
+685.5·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக )[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (Cu ஆக)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாமிர(II) புளோரைடு
தாமிரம்(II) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் செப்பு(I) புரோமைடு
நிக்கல்(II) புரோமைடு
துத்தநாக புரோமைடு
காட்மியம் புரோமைடு
பாதரச(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாமிர(II) புரோமைடு (Copper(II) bromide) என்பது CuBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புகைப்படச் செயலாக்கத்தில் ஓர் அதிகப்படுத்தியாகவும் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு புரோமினேற்றும் முகவராகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[2]. ஐதரசன் புரோமைடு தாமிர இறக்கக் குழாயுடன் வினைபுரிந்து அத்தளத்திலேயே உருவாகும் தாமிர புரோமைடு ஆவியை ஊடகமாகப் பயன்படுத்தும் வகையான தாமிர ஆவி சீரொளியிலும் தாமிர(II) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது[3]. மஞ்சள் அல்லது பச்சைநிற ஒளியை உற்பத்தி செய்யும் இவ்வுப்பு தோல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

காப்பர் ஆக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலம் வினைபுரிவதால் தாமிர(II) புரோமைடு உருவாகிறது [4].

CuO + 2HBr → CuBr2 + H2O.

தூய்மையாக்கல்[தொகு]

நீரிலிருந்து மறு படிகமாக்கல் முறையில் தாமிர(II) புரோமைடு தூய்மையாக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் தாமிரபுரோமைடை வடிகட்டி வெற்றிடத்தில் செறிவூட்டப்படுகிறது. பின்னர் இவ்விளைபொருள் பாசுபரசு பென்டாக்சைடைப் பயன்படுத்தி நீர் நீக்கம் செய்யப்படுகிறது.

மூலக்கூற்று மற்றும் படிகக் கட்டமைப்பு[தொகு]

திண்மநிலையில் சமதள CuBr4 அலகுகள் எதிர் திசையில் இணைக்கப்பட்டு உருவாகும் சங்கிலிகளுடன் பல்லுருவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது[5]. ஒற்றை சரிவச்சுக் கட்டமைப்பும், a = 714 பைக்கோமீட்டர், b = 346 பைக்கோமீட்டர் c = 718 பைக்கோமீட்டர் e ß = 121° 15' என்ற அளபுரு மாறிலிகளுடன் கூடிய C2/எம் இடக்குழுவும் இக்கட்டமைப்பில் உள்ளன. வாயு நிலையின் உயர் வெப்பநிலையில் CuBr2 இன் ஒற்றை அலகுகள் காணப்படுகின்றன[6].

வினைகள்[தொகு]

குளோரோஃபார்ம் எத்தில் அசிட்டேட்டில் இருக்கும் தாமிர(II) புரோமைடு கீட்டோன்களுடன் வினைபுரிந்து ஆல்பா-புரோமோ கீட்டோன்களை உருவாக்குகிறது. இவ்விளை பொருளில் இருந்து வழிப்பெறுதி சேர்மங்களை நேரடியாகத் தயாரிக்க முடியும். ஆல்பா-புரோமோ கீட்டோன்களைத் தயாரிப்பதில் இப்பலவகைப்பட்ட தயாரிப்பு முறை ஒரு நேரடியான தயாரிப்பு முறை எனவும் மிகச்சிறந்த தெரிவு முறை எனவும் கருதப்படுகிறது[7]. என் – பென்டைல் கிளைகோசைடுகளை இருபுரோமினேற்றம் செய்ய CuBr2/LiBr வினைப்பொருள் இணை பயன்படுகிறது. இதன் மூலம் என்–பென்டைல் கிளைக்கோசைடுகளை ஆலோனியம் பிணைப்பு வினையின்போது கிளைகோசில் ஏற்பிகளாக செயல்பட வைக்க இயலும். இதனால் மூலக்கூற்று புரோமினுடன் நேரடி வினைக்கு தடையேற்படுத்தும் ஆல்கீனைல் சர்க்கரைகளிலிருந்து அதிக அளவு டைபுரோமைடுகளைத் தயாரிக்கலாம்[8].

பயன்கள்[தொகு]

தாமிர(II) புரோமைடு சீரொளி உற்பத்தி செய்யும் துடிப்புள்ள மஞ்சள் மற்றும் பச்சை ஒளி தொல் புண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது[9]தோலைப் புத்தாக்கம் செய்யும் சிகிச்சையிலும் தாமிர(II) புரோமைடு பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது[10].. பரவலாக புகைப்படத் தொழிலில் இச்சேர்மத்தின் கரைசல் பயன்படுத்தப்படுகிறது[11]. ஒர் ஈரமுணரும் வேதிப்பொருளாக ஈரம் காட்டி அட்டைகளில் தாமிர(II) புரோமைடைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது[12].

முற்காப்பு[தொகு]

தாமிர(II) புரோமைடை விழுங்க நேரிட்டால் ஆபத்தாகும். மைய நரம்பு மண்டலம், மூளை, கண்கள், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை இதனால் பாதிக்கப்படும். தோல், கண்கள் மற்றும் சுவாச உறுப்புகளில் எரிச்சலை உண்டாக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 2. Huang, Jianhui; Macdonald, Simon J. F.; Harrity, Joseph P. A. (2009). "A cycloaddition route to novel triazole boronic esters". Chem. Commun. (4): 436–438. doi:10.1039/b817052e. 
 3. Livingstone, E. S.; Maitland, A.. "A high power, segmented metal, copper bromide laser". Measurement Science and Technology 2 (11): 1119. doi:10.1088/0957-0233/2/11/022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0957-0233. 
 4. Breitinger, D. K.; Herrmann, W. A., தொகுப்பாசிரியர்கள் (1999). Synthetic methods of Organometallic and Inorganic Chemistry. Thieme Medical Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86577-662-8. 
 5. Helmholz, Lindsay (1947). "The Crystal Structure of Anhydrous Cupric Bromide". J. Am. Chem. Soc. 69 (4): 886–889. doi:10.1021/ja01196a046. 
 6. Conry, Rebecca R. (2006). "Copper: Inorganic & Coordination Chemistry". (2nd). John Wiley & Sons. DOI:10.1002/0470862106.ia052. ISBN 978-0-470-86210-0. 
 7. King, L. Carroll; Ostrum, G. Kenneth (1964). "Selective Bromination with Copper(II) Bromide". J. Org. Chem. 29 (12): 3459–3461. doi:10.1021/jo01035a003. 
 8. Rodebaugh, Robert; Debenham, John S.; Fraser-Reid, Burt J.; Snyder, James P. (1999). "Bromination of Alkenyl Glycosides with Copper(II) Bromide and Lithium Bromide: Synthesis, Mechanism, and DFT Calculations". J. Org. Chem. 64 (5): 1758–1761. doi:10.1021/jo9718509. 
 9. McCoy, S.; Hanna, M.; Anderson, P.; McLennan, G.; Repacholi, M. (June 1996). "An evaluation of the copper-bromide laser for treating telangiectasia". Dermatol Surg. 22 (6): 551–7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-0512. பப்மெட்:8646471. 
 10. Davis P., Town G., Haywards H. A practical comparison of IPLs and the Copper Bromide Laser for photorejuvenation, acne and the treatment of vascular&pigmented lesions.
 11. Diane Heppner The Focal Encyclopedia of Photography, Inc. Elsevier 20074th edition
 12. George McKedy US Patent Application Publication, Pub.No.: US2010/0252779 A1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர(II)_புரோமைடு&oldid=3075811" இருந்து மீள்விக்கப்பட்டது