இலித்தியம் புரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7550-35-8 | |
ChemSpider | 74049 |
EC number | 231-439-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82050 |
வே.ந.வி.ப எண் | OJ5755000 |
| |
UNII | 864G646I84 |
பண்புகள் | |
LiBr | |
வாய்ப்பாட்டு எடை | 86.845(3) கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் நீர் உறிஞ்சும் |
அடர்த்தி | 3.464 கி/செ.மீ3 |
உருகுநிலை | 552 °C (1,026 °F; 825 K) |
கொதிநிலை | 1,265 °C (2,309 °F; 1,538 K) |
143 கி/100 மி.லி (0 °செ) 166.7 கி/100 மி.லி (20 °செ) 266 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | மெத்தனால், எத்தனால், ஈதர், அசிட்டோன்ஆகியனவற்றில் கரையும். பிரிடினில் சிறிதளவு கரையும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.784 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-350.3 கியூ/மோல் |
Std enthalpy of combustion ΔcH |
-157 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
66.9 யூ/மோல் K |
வெப்பக் கொண்மை, C | 51.88 யூ/மோல் K |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1800 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் புளோரைடு இலித்தியம் குளோரைடு இலித்தியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புரோமைடு பொட்டாசியம் புரோமைடு ருபீடியம் புரோமைடு சீசியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் புரோமைடு (Lithium bromide) என்பது LiBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் அதிகமான நீர் உறிஞ்சும் திறனைக் கொண்டிருப்பதால் இது பல குளிர் சாதானக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]
தயாரிப்பும் பண்புகளும்
[தொகு]இலித்தியம் கார்பனேட்டுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் புரோமைடைத் தயாரிக்கலாம். இவ்வுப்பு மற்ற கார உலோக புரோமைடுகள் போலில்லாமல் பல படிக வடிவ நீரேற்றுகளாக உருவாகிறது[3] . இலித்தியம் புரோமைடின் நீரிலி வடிவம் சோடியம் குளோரைடு போல கனசதுர படிகங்களாக உருவாகிறது.
இலித்தியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ( ஐதரசன் புரோமைடின் நீர்க் கரைசல்) ஆகியன தண்ணீர் முன்னிலையில் இலித்தியம் புரோமைடை வீழ்படிவாக்குகின்றன.
LiOH + HBr → LiBr + H2O
பயன்கள்
[தொகு]குளிர் சாதானக் கருவிகளில் ஈரம் உலர்த்தியாக இலித்தியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது. இவ்வுப்புகளை நீருடன் சேர்த்து உட்கவர் குளிர்விப்பிகளில் பயன்படுத்துகிறார்கள். தவிர இவை கரிம தொகுப்பு வினைகளில் வினைப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இது சில மருந்துகளுடன் கூட்டு விளைபொருளாக மீள்நிகழ் வினையுடன் உருவாகிறது.[2]
மருத்துவப் பயன்கள்
[தொகு]ஆரம்பகால 1990 களில் இலித்தியம் புரோமைடு தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1940 களில் இந்தப்பயன்பாடு குறைந்து போனது. ஏனெனில், உப்புக்கு மாற்றாக இதைப் பயன்படுத்திய சில இதய நோயாளிகள் பிறகு இறந்து போனார்கள்.[4]
இலித்தியம் கார்பனேட்டு மற்றும் இலித்தியம் குளோரைடு உப்புகள் போல இதுவும் இருமுனைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 225 மில்லி கிராம் இலித்தியம் புரோமைடு கொடுத்துவந்தால் புரோமியம் நோய்க்கு ஆளாக நேரிடும்.
தீங்குகள்
[தொகு]இலித்தியம் உப்புகள் அரிப்புத்தன்மையும் உளவியல் சார்ந்த நோய்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன. இலித்தியம் புரோமைடு உப்பானது நீரில் கரையும் போது வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இது, கரைசலின் எதிர் உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7550-35-8
- ↑ 2.0 2.1 Ulrich Wietelmann, Richard J. Bauer "Lithium and Lithium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH: Weinheim.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Bipolar disorder
வெளி இணைப்புகள்
[தொகு]- "A PDF file from GFS Chemicals, a supplier of lithium bromide" (PDF). Archived from the original (PDF) on 2006-03-16. பார்க்கப்பட்ட நாள் 2005-09-15.