உருபீடியம் கார்பனேட்டு
Appearance
(ருபீடியம் கார்பனேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் கார்பனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
584-09-8 ![]() | |
ChemSpider | 10950 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11431 |
வே.ந.வி.ப எண் | FG0650000 |
| |
பண்புகள் | |
Rb2CO3 | |
வாய்ப்பாட்டு எடை | 230.945 கி/மோல் |
தோற்றம் | வெண் துகள், நன்றாக நீருறிஞ்சும் |
உருகுநிலை | 837 °C (1,539 °F; 1,110 K)[1] |
கொதிநிலை | 900 °C (1,650 °F; 1,170 K) (சிதைவடையும்) |
நன்றாகக் கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் கார்பனேட்டு சோடியம் கார்பனேட்டு பொட்டாசியம் கர்பனேட்டு சீசியம் கார்பனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ருபீடியம் கார்பனேட்டு (Rubidium carbonate) என்பது Rb2CO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்திற்கு இசைவான ஒரு வேதிச் சேர்மம் ஆகும். நீரில் எளிதாகக் கரையக்கூடிய இச்சேர்மம் நிலைப்புத்தன்மையுடன் அதிக வினைத்திறனற்றுக் காணப்படுகிறது. ருபீடியம் தனிமமானது ருபீடியம் கார்பனேட்டு என்ற சேர்மமாகவே விற்பனை செய்யப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]அமோனியம் கார்பனேட்டை ருபீடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வினைப்படுத்துவதால் ருபீடியம் கார்பனேட்டைத் தயாரிக்க முடியும்[2]
பயன்கள்
[தொகு]சிலவகை கண்ணாடிகள் தயாரிப்பில் ருபீடியம் கார்பனேட்டு பயன்படுகிறது. கண்ணாடிகளின் நிலைப்புத்தன்மை, நீடித்த உழைப்பு மற்றும் அவற்றின் கடத்தாத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்ய இது பயனாகிறது. மேலும் இயற்கை வாயுவில் இருந்து குறுகிய சங்கிலி ஆல்ககால்கள் தயாரிக்கும் முறைகளில் இது வினையூக்கியாகப் பயன்படுகிறது[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8
- ↑ 1911encyclopedia.com
- ↑ "Canada Patents". Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.