சீசியம் காட்மியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் காட்மியம் குளோரைடு
Caesium cadmium chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் காட்மியம் குளோரைடு
பண்புகள்
CsCdCl3
வாய்ப்பாட்டு எடை 351.675 கி/மோல்
தோற்றம் வெண்மை அல்லது நிறமற்ற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சீசியம் காட்மியம் குளோரைடு (Caesium cadmium chloride) என்பது CsCdCl3 என்பது ஒரு செயற்கை முறை படிகப் பொருளாகும். இவ்வகைப் படிகங்களை AMX3 என்ற பொதுக் குறியீட்டால் அழைப்பார்கள். (A= காரவுலோகம், M= ஈரிணை உலோகம், X= ஆலசன் அயனிகள்). இக்குழுவைச் சார்ந்த படிகங்கள், a = 7.403 Å மற்றும் c = 18.406 Å நீளங்கள் கொண்ட அலகு செல்களால் ஆன அறுகோண இடக்குழு P63/mmc வில் படிகமாகின்றன. இவ்வமைப்பில் உள்ள ஒரு காட்மியம் அயனி D3d சீரொழுங்கும் மற்றொரு காட்மியம் அயனி C3v சீரொழுங்கும் பெற்றுள்ளன[1].

நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலுடன் சமகரைமைப் பருமன் அளவுள்ள சீசியம் குளோரைடு மற்றும் காட்மியம் குளோரைடு கலப்பதால் உருவாகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Electron paramagnetic resonance spectra of vanadium(II) and nickel(II) doped into crystals of cesium cadmium chloride and a redetermination of the structure of cesium cadmium chloride. Jin Rong Chang, Gary L. McPherson, and Jerry L. Atwood, Inorg. Chem., 1975, 14 (12), 3079-3085. எஆசு:10.1021/ic50154a044
  2. Electron paramagnetic spectrum of manganese(II)-manganese(II) pairs in single crystals of cesium cadmium chloride. Electronic structure of the nonachlorodimanganate(5-) dimer Gary L. McPherson, and Jin Rong Chang, Inorg. Chem., 1976, 15 (5), 1018-1022. எஆசு:10.1021/ic50159a006