பொட்டாசியம் ஐதரைடு
இனங்காட்டிகள் | |
---|---|
7693-26-7 | |
ChemSpider | 74121 |
EC number | 232-151-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82127 |
| |
பண்புகள் | |
KH | |
வாய்ப்பாட்டு எடை | 40.1062 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 1.43 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | decomposes at ~400 °C[2] |
வினைபுரியும் | |
கரைதிறன் | பென்சீன், இரு எத்தில் ஈதர், CS2 ஆகியவற்றில் கரையாது. |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-57.82 கியூ/மோல் |
வெப்பக் கொண்மை, C | 37.91 J/(மோல் கெ) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஐதரைடு சோடியம் ஐதரைடு ருபீடியம் ஐதரைடு சீசியம் ஐதரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் ஐதரைடு (Potassium hydride) என்பது KH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் மற்றும் ஐதரசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாகவும் வணிக மாதிரிகள் சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன. வலிமையான காரமாகிய பொட்டாசியம் ஐதரைடு தீவிரமாகவும் அபாயகரமாகவும் வினைபுரியும் தன்மையைக் கொண்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் மிகவும் பயனுள்ளதாக விளங்கும் இதை கனிம எண்ணெயின் நீர்மக் குழம்பு (~35%) அல்லது சிலசமயங்களில் பாரஃபின் மெழுகு என்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்.[3]
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் மற்றும் ஐதரசன் இரண்டும் நேரடியாக வினைபுரிந்து பொட்டாசியம் ஐதரைடு உருவாகிறது.
- 2 K + H2 → 2 KH
1807 ஆம் ஆண்டில் அம்பரி டேவி பொட்டாசியத்தைக் கண்டறிந்த பின்னர் சிலநாட்களிலேயே இவ்வினையைக் கண்டறிந்தார். ஐதரசன் சூழலில் கொதிநிலைக்குச் சற்று குறைவாக பொட்டாசியத்தைச் சூடாக்கும் போது இவ்வினை நிகழ்வதை அவர் கண்டறிந்தார்[4]:p.25.
பொட்டாசியம் ஐதரைடு கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை,[5] ஆனால் உருகிய சோடியம் ஐதராக்சைடு போன்ற உருகிய ஐதராக்சைடு மற்றும் உப்புக் கலவைகளில் கரைகிறது.
பயன்கள்
[தொகு]பொட்டாசியம் ஐதரைடு தண்ணீருடன் வினைபுரிந்து பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரசன் வாயுவைக் கொடுக்கிறது.
- KH + H2O → KOH + H2
சோடியம் ஐதரைடை விட பொட்டாசியம் ஐதரைடு வலிமையான காரமாக இருக்கிறது. குறிப்பிட்ட வகை கார்பனயில் சேர்மங்கள் மற்றும் அமீன்களில் புரோட்டான் நீக்கம் செய்து ஈனோலேட்டுகள் மற்றும் அமைடுகள் உருவாக்குவதில் பொட்டாசியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது.[6]
பாதுகாப்பு
[தொகு]பொட்டாசியம் ஐதரைடு காற்றில் தீப்பற்றும் இயல்புடையது. அமிலங்களுடன் தீவிரமாக வினைபுரியக்கூடியது. ஆக்சிசன் உட்பட ஆக்சிசனேற்றிகளுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலேயே தீப்பற்றும் தன்மை கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Robert E. Gawley, Xiaojie Zhang, Qunzhao Wang, "Potassium Hydride" Encyclopedia of Reagents for Organic Synthesis 2007 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rp223.pub2
- ↑ David Arthur Johnson; Open University (12 August 2002). Metals and chemical change. Royal Society of Chemistry. pp. 167–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-665-2. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.
- ↑ Potassium Hydride in Paraffin: A Useful Base for Organic Synthesis Douglass F. Taber and Christopher G. Nelson J. Org. Chem.; 2006; 71(23) pp. 8973–8974 எஆசு:10.1021/jo061420v
- ↑ Humphry Davy (1808), The Bakerian Lecture on some new phenomena of chemical changes produced by electricity, particularly the decomposition of fixed alkalies, and the exhibition of the new substances which constitute their bases; and on the general nature of alkaline bodies. Philosophical Transactions of the Royal Society, volume 88, pages 1–44. In The Development of Chemistry, 1789–1914: Selected essays, edited by D. Knight, pp. 17–47.
- ↑ Pradyot Patnaik (1 July 2007). A Comprehensive Guide to the Hazardous Properties of Chemical Substances. John Wiley and Sons. pp. 631–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13494-8. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011.
- ↑ Charles A. Brown, Prabhakav K. Jadhav (1925). "(−)-α-Pinene by Isomerization of (−)-β-Pinene". Organic Syntheses 65: 224. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV8P0553.; Collective Volume, vol. 8, p. 553