பொட்டாசியம் ஐதரோசல்பைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரோசல்பைடு
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பைசல்பைடு, பொட்டாசியம் சல்பைதரேட்டு, பொட்டாசியம் ஐதரசன் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
1310-61-8 ![]() | |
ChemSpider | 92246 ![]() |
EC number | 215-182-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 102109 |
| |
UNII | SX1L03AL9I ![]() |
பண்புகள் | |
KHS[1] | |
வாய்ப்பாட்டு எடை | 72.171 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.68–1.70 கி/செ.மீ3 |
உருகுநிலை | 455 °C (851 °F; 728 K) |
கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் திண்மம், துர்நாற்றம் வீசும், ஐதரசன் சல்பைடை வெளிவிடும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் ஐதராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் ஐதரோசல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் ஐதரோசல்பைடு (Potassium hydrosulfide) என்பது KHS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நிறமற்ற உப்பில் K+ மற்றும் பைசல்பைடு [SH]− அயனிகள் உள்ளன.
தயாரிப்பு
[தொகு]நீரிய பொட்டாசியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்யும்போது அரை நடுநிலையாக்க விளைபொருளாக பொட்டாசியம் ஐதரோசல்பைடு உருவாகிறது.[2] பொட்டாசியம் சல்பைடின் நீர்கரைசல்கள் பொட்டாசியம் ஐதரோசல்பைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளன. பொட்டாசியம் சல்பைடுடன் அதிகப்படியான ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் தொகுப்புமுறையில் பொட்டாசியம் ஐதரோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]பொட்டாசியம் ஐதரோசல்பைடின் கட்டமைப்பு பொட்டாசியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது.[3] [SH]− அயனிகளின் கோளமற்ற சமச்சீர்தன்மையால் இவ்வமைப்பு சிக்கலானதாக உள்ளது.
பயன்கள்
[தொகு]சில கரிமக் கந்தகச் சேர்மங்களின் தயாரிப்புகளில் இந்த சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4] கந்தகம் கூடுதலாக சேர்க்கப்பட்டால் இருபொட்டாசியம் பெண்டாசல்பைடு கிடைக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. p. 4-82.
- ↑ Kurzer, F.; Lawson, A. (1962). "Thiobenzoylthioglycolic Acid". Organic Syntheses 42: 100. doi:10.15227/orgsyn.042.0100. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P1046.; Collective Volume, vol. 5, 1973, p. 1046
- ↑ Haarmann, F; Jacobs, H.; Roessler, E.; Senker, J. (2002). "Dynamics of Anions and Cations in Hydrogensulfides of Alkali Metals (NaHS, KHS, RbHS): A Proton Nuclear Magnetic Resonance Study". Journal of Chemical Physics 117 (3): 1269–1276. doi:10.1063/1.1483860. Bibcode: 2002JChPh.117.1269H.
- ↑ Dittmer, Donald C. (2001). Encyclopedia of Reagents for Organic Synthesis. Ed. Paquette, L.. J. Wiley & Sons, New York. DOI:10.1002/047084289X.rp227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.