பொட்டாசியம் சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஆக்டாடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
593-29-3 Y
ChemSpider 11143
EC number 209-786-1
InChI
 • InChI=1S/C18H36O2.K/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2-17H2,1H3,(H,19,20);/q;+1/p-1
  Key: ANBFRLKBEIFNQU-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23673840
 • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[K+]
UNII 17V812XK50
பண்புகள்
C
18
H
35
KO
2
வாய்ப்பாட்டு எடை 322.56
தோற்றம் colorless crystals
அடர்த்தி 1.12 கி/செ.மீ3
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
சூடான் நீரில் கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் சிடீயரேட்டு (Potassium stearate) என்பது C18H35KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். உலோகக் கரிமச் சேர்மமான இச்சேர்மம் பொட்டாசியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதியாக இருப்பதால் இது ஓர் உலோக சோப்பு என்றும் கருதப்படுகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

ஆல்ககாலில் கரைக்கப்பட்ட பொட்டாசுடன் சிடீயரிக் அமிலத்தின் சூடான கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பொட்டாசியம் சிடீயரேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

நிறமற்ற படிகங்களாக பொட்டாசியம் சிடீயரேட்டு உருவாகிறது. குளிர்ந்த நீரில் சிறிதளவு கரையும். சூடான நீரிலும் எத்தனால் கரைசலிலும் நன்கு கரையும். ஈதர், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு போன்ற கரைப்பான்களில் கரையாது.[4] திரவ சோப்பின் ஒரு கூறாகவும் இது கருதப்படுகிறது.

பயன்கள்[தொகு]

பொட்டாசியம் சிடீயரேட்டு முதன்மையாக அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களில் குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு சுத்தப்படுத்தும் பொருளாகவும், மசகு எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5][6]

தீங்குகள்[தொகு]

தோல் எரிச்சலையும் கடுமையான கண் எரிச்சலையும் ஏற்படுத்தும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "potassium stearate" (in ஆங்கிலம்). paulaschoice-eu.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 2. "Potassium Stearate". Cosmetics Info. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 3. Allen, Alfred Henry (1886). Commercial Organic Analysis: Being a Treatise on the Properties, Proximate Analytical Examination, and Modes of Assaying the Various Organic Chemicals and Preparations Employed in the Arts, Manufactures, Medicine, &c. With Concise Methods for the Detection and Determination of Their Impurities, Adulterations, and Products of Decomposition. ... (in ஆங்கிலம்). P. Biakiston & Son. p. 230. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 4. "Potassium Stearate". Silver Fern Chemical Inc. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 5. "Potassium Stearate OPK-1000". Hallstar BPC. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 6. "potassium stearate | Paula's Choice". Paula's Choice. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
 7. "Potassium Stearate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.