பொட்டாசியம் பைசல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அமில சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7646-93-7 | |
ChemSpider | 56396 |
EC number | 231-594-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 516920 |
வே.ந.வி.ப எண் | TS7200000 |
| |
UN number | 2509 |
பண்புகள் | |
KHSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 136.169 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.245 கி/செ.மி3 |
உருகுநிலை | 197 °C (387 °F; 470 K) |
கொதிநிலை | 300 °C (572 °F; 573 K) (சிதைவடையும்) |
36.6 கி/100 மி.லி (0 °செ) 49 கி/100 மி.லி (20 °செ) 121.6 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | அசிட்டோன், எத்தனால் போன்றவற்றில் கரையும். |
−49.8•10−6 செ.மீ3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1163.3 கி.யூ/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் (C) |
R-சொற்றொடர்கள் | R34, R36, R37, R38 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S36/37/39, S45 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2340 மி.கி*கி.கி−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பைசல்பேட்டு (Potassium bisulphate) என்பது KHSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தக அமிலத்தினுடைய பொட்டாசியம் அமில உப்பாக இது கருதப்படுகிறது.
இயற்கைத் தோற்றம்
[தொகு]மெர்காலைட்டு என்ற கனிம வடிவ பொட்டாசியம் பைசல்பேட்டு மிக அரிதாகத் தோன்றுகிறது. மிசெனைட்டு என்ற சிக்கலான கனிம வடிவத்திலும் பொட்டாசியம் பைசல்பேட்டு காணப்படுவதுண்டு.
தயாரிப்பு
[தொகு]கந்தக அமிலத்தை சம அளவு மோலார் அடர்த்தியுள்ள பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது [1]
- H2SO4 + KOH → KHSO4 + H2O
கந்தக அமிலத்துடன் பொட்டாசியம் சல்பேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[2]
- H2SO4 + K2SO4 → 2 KHSO4
பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் வினையில் முக்கியமான உடன் விளைபொருளாகவும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[3]
- KNO3 + H2SO4 → KHSO4 + HNO3
வேதிப்பண்புகள்
[தொகு]பொட்டாசியம் பைசல்பேட்டு வெப்பச்சிதைவு அடைவதால் பொட்டாசியம் பைரோசல்பேட்டும் தண்ணீரும் உருவாகின்றன[2]
- 2 KHSO4 → K2S2O7 + H2O
Temperatures above 600 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் பைசல்பேட்டு சிதைவடைந்து பொட்டாசியம் சல்பேட்டையும் கந்தக மூவாக்சைடையும் உருவாக்குகிறது. :[4]
- 2 KHSO4 → K2SO4 + SO3 + H2O
பயன்கள்
[தொகு]பொட்டாசியம் பைசல்பேட்டு பகுப்பாய்வு வேதியியலில் ஒரு சிதைக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது பொட்டாசியம் பெர்சல்பெட்டு என்ற வலிமையான ஆக்சிசனேற்றி தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது[5] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McPherson, William (1913). A Course in General Chemistry. New York: Ginn and Company. p. 156. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
- ↑ 2.0 2.1 Washington Wiley, Harvey (1895). Principles and Practice of Agricultural Analysis: Fertilizers. Easton, PA.: Chemical Publishing Co. p. 218. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
- ↑ Pradyot, Patnaik (2003). Handbook of Inorganic Chemicals. New York: McGraw-Hill. p. 636. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0070494398.
- ↑ Iredelle Dillard Hinds, John (1908). Inorganic Chemistry: With the Elements of Physical and Theoretical Chemistry. New York: John Wiley & Sons. p. 547. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
- ↑ Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry Vol. 1, 2nd Ed. Newyork: Academic Press. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0121266011.